திருக்குறள் கதைகள்
19
வழியே இல்லை! அப்பப்பா! இந்தத் துன்பமா?" என்று எரிச்சலோடு பேசினேன்.
"பாவம்! பிழைக்கத் தெரியாத அப்பாவி! புதையலே நம்மைத் தேடிக்கொண்டு வந்திருக்கும்போது. தோண்டி எடுக்கும் புதையல் நமக்கு எதற்கு?” என்று மருதப்பன் கொண்டு வந்திருக்கும் பணத்தைச் சுட்டிக்காட்டி இரவோடு இரவாக அவனைத் தீர்த்துக்கட்டிவிட ஏவினாள்.
சிறிது நேரம் திகைத்தேன். அவன் பணத்தைக் கண்டு அறிவு சிதைந்துபோய் இருந்த எனக்கு, அதற்குமேலும் சிந்திக்கும் அறிவு செத்துப் போய்விட்டது. எளிதில் ஏழு நூறு ரூபா சம்பாதிக்க எண்ணிவிட்டேன். அவளைச் சொல்ல என்ன இருக்கிறது? மனம்விட்டு ஆண்டாண்டு காலமாகப் பழகியவனை நானே கொல்ல ஆயத்தமாகும் போது அவள் ஏவிய சூழ்நிலை’ என்று சூழ்நிலை மேல் பாரம் போடுவது தவறு. நான் பணவெறி கொண்ட மிருகமாகிவிட்டேன்.
டு
“சோலையூர் என்பது எங்கள் ஊருக்குப் பெயர் இல்லை எங்கள் வீட்டுக்குப் பெயர் ஏனெனில் என் வீடு அன்றி இரண்டு கல் தொலைவுக்கு வேறு வீடே கிடையாது. இருட்டி விட்டால் மனித நடமாட்டமே இருக்காது. என்னைத் தேடிவந்தவர்களுக் கெல்லாம் சாப்பாடு என் வீட்டில்தான். மாட்டுத் தரகு பார்க்கும் நான் நாள்தோறும் தேடி வருபவர்களுக்கெல்லாம் விருந்தளிக்க முடியுமா? அளித்தேன்; ஆனால் எங்கள் வீட்டுக்கு ஆகும் செலவையெல்லாம் சேர்த்து வந்தவர்களிடம் வாங்கிக் கொண்டு விடுவாள் பணப்பெட்டி என் மனைவி அது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. எனக்கும் தான் என்ன பழக்கமாகிவிட்டது. பழக்கமாகப் போகிவிட்ட ஒன்று பிழை யென்று தெரியாதே!
66
மருதப்பன் இரவுச் சாப்பாட்டை முடித்தான். அன்று பணப்பெட்டி சிரித்துச் சிரித்துப் பேசி, சோறு கறிகளை அள்ளிக்கொட்டி மருதப்பனால் முடியாத அளவுக்கு உண்ணச் செய்துவிட்டாள். தனக்கென்று வைத்திருந்த வெற்றிலை பாக்கையும் எடுத்துத் தந்தாள். எல்லாம் முடிந்த பின் தாழ்வாரத்திலே கிடந்த கட்டிலிலே படுத்துக்கொண்டான் மருதப்பன். சிறிது நேரம்தான் சென்றது. 'குறட்டை ஒலி' எழுந்துவிட்டது. அடுத்த திட்டத்தை முடித்துவிட நான் ஆயத்தமானேன்.