உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

66

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

என்னை இல்லாமல் மாடு வாங்காதவனும், நூற்றுக் கணக்கான தடவைகளாவது என்னைத் தேடிக்கொண்டு வந்து என் வீட்டிலேயே தங்கி மாடு வாங்கிச் சென்றவனும் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மருதப்பன்.

“மருதப்பன் வழக்கம்போல் என்னைத்தேடி வந்தான். அவன் பையிலே இருந்த ரூ. 700ஐயும் என்னிடம் தந்து, 'மாடுகள் அவசரமாக வாங்கவேண்டும், வாழைத்தோட்டம் காய்கின்றது. பழைய மாடுகளை ஆதாயமான விலைக்குக் கேட்டபடியால் விற்றுவிட்டேன். எந்த வேலை இருந்தாலும் இருக்கட்டும். நாளையே போய் மாடு பிடித்துவிட வேண்டும். உள்ளூரிலேயே கூட மாடுகள் விற்பனைக்கு இருந்தன. இருந்தாலும் உன்னை ல்லாமல் மாடுபிடிக்க மனம் வரவில்லை. உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம் வேறு எவரிடத்தும் ஏற்படமாட்டேன் என்கிறது என்றான். “நாம் என்ன இன்று நேற்றுப் பழகியவர்களா?” என்று சொல்லிக்கொண்டே அவன் தந்த ரூ. 700ஐயும் என் மனைவி பண பெட்டி பண பெட்டியினிடம் பத்திரமாக வைக்குமாறு

தந்தேன்.

66

மாலைப்பொழுது ஆனதால் நானும் மருதப்பனும் வெளியே போனோம். தோட்டத்துக் கிணற்றிலே மருதப்பன் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினோம். எனக்கு மருதப்பனைப் பார்க்கிலும் அவன் தந்த ரூ.700 பெரிதாகத் தென்பட்டது. அதன்மீதே என் உள்ளம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிவு கெட்ட நேரத்தே ஏழு நூறு ரூபாய்களும் 7 கோடி ரூபாய்களாகத் தெரிந்தன என்றாலும் உண்மைதான்” என்று நிறுத்தினான் மலையப்பன்.

66

“பிறகு” என்று தூண்டினான் சின்னச்சாமி

“பிறகென்ன? எனக்குப் பெண் என்று வாய்த்திருந்தாளே ஒரு பேய்! அவள் என்னைத் தனியே அழைத்து வைத்து நாலைந்து நாட்களுக்கு நாயாக அலைந்தாலும் நாலைந்து ரூபாய் தான் கிடைக்கப்போகின்றது. நாம் நான்கு பேரைப் போல் நான்கைந்து காசு வைத்துப் பிழைத்தோம் என்று எப்பொழுதுதான் ஆகப் போகின்றோமோ?" என்று புலம்பினாள். “நல்ல துணிமணி வசதி உண்டா?” என்று ஏழ்மை நிலைமையை இடித்துக் காட்டினாள். நானும் வெறுப்போடு 'இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? புதையலா கிடக்கிறது. வீட்டைவிட்டு எங்கேனும் போய்த் தொலைவது தவிர்த்து வேறு