திருக்குறள் கதைகள்
17
"நாட்கள் இருக்கட்டும்: உனக்கேன் தூக்குத் தண்டனை தந்தார்கள்?”
"எவர் எவருக்குத் தீர்ப்பிலே நியாயம் உண்டோ. அநியாயம் உண்டோ; ஆனால் எனக்கு வழங்கிய தீர்ப்பு நேர்மை தவறாதது. கொலைகாரன் நான். எத்தகைய காடிய கொலைகாரனும் அஞ்சும் கொடுங் கொலைகாரன் நான். அதன் பயனை அனுபவிக்க வேண்டாமா? உறக்கமே எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். என் வினையை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் அதன் தொல்லை அடுத்த பிறவியிலாவது இருக்காது அல்லவா! அதனால்தான் சாக அஞ்சிக் கிடந்த நான்கூட நீங்கள் அதிகாலையில் சொல்லிக்கொண்டிருந்த குறள் பாட்டைக் கேட்டுத் தெளிவுகொண்டேன். “பிறர்க்கின்னா செய்யின் ல்லை - பிறர்க்கின்னா செய்யும் போதே எனக்கின்னா அடைந்துகொண்டேன் நான். நம்புகிறீர்களா?”
எண்
-
தொண்டை அடைத்துக்கொள்ளக் கூறினான் 103 ஆம் கைதி மலையப்பன். மிகச் சோர்வுடன் தலையை அசைத்துக்கொண்டான் சின்னச்சாமி.
மலையப்பன் பேசினான்: "கேளுங்கள்; என் கொடுஞ்
சயலை
இப்படி படி உள்ளம் உருக எவரிடமும் எவரிடமும் இதுவரை சான்னது இல்லை. இனி ஒளித்து வைத்துத்தான் ஆக வேண்டியது என்ன இருக்கிறது? இன்று இல்லாவிடில் நாளை தூக்கு! அதற்குள் ஒருவரிடம் மனம் விட்டுக் குற்றத்தைக் கூறுவதாவது, கடைசியாக எனக்குக் கொஞ்சம் அறிவு வந்தது என்பதைக் காட்டும். சொல்கிறேன்.
66
நான் ஒரு மாட்டுத் தரகன், என்னைப் பொறுத்த அளவிலும் வாங்குபவன் விற்பவன் ஆகிய இருவரிடமும் எவ்வளவு அதிகமாகப் பணம் சுருட்ட முடியுமோ அவ்வளவு பணம் சுரண்டிவிடுவேன். இருந்தாலும் எனக்குக் கிராக்கி எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருந்தது. காரணம், மாடுகளின் இலக்கணம் தெரிந்து அவரவர் மனம்போல் பிடித்துத் தருவதிலும், வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரையும் எப்படியேனும் இழுத்துப் பிடித்து ஒப்புக் கொண்டு விடுமாறு செய்வதிலும் எனக்கிருந்த திறமைதான். பொதுவாக, என்னைப் போல மாட்டுத் தரகர்களாக இருந்த பலர் என்னைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு என் வேலை சிறப்பாக நடைபெற்று
வந்தது.
-