16
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
என்று எதனையோ சிந்தித்துக்கொண்டே கூறினான் சின்னச் சாமி.
"சின்னச்சாமி! உன் அளவுக்கு எனக்குப் படிப்பு இல்லை. பேசவும் தெரியாது. ஆனால் எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன பாட்டை இன்னொரு முறை சொல்லு” என்றான்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
66
நீ
அருமையான பாட்டு; நேர்முகமாகவும், மக்களுக்கு நல்வழி காட்டுகின்றது; "பிறர்க்கினிது முற்பகல் செய்யின் தமக்கினிது பிற்பகல் தாமே வரும்" என்றும் பொருள்படு மல்லவா!” என்றான் காளை. ஆமாம்! ஒன்று சொன்னாலும் நன்று சொன்னாய்” என்று காளையின் கையைக் குலுக்கினான் சின்னச்சாமி.
66
பொழுது போனது தெரியாமல் காளையும் சின்னச் சாமியும் பேசிக் கொண்டிருந்தனர் கிறுக்கியின் கத்துதல் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றது. பொழுதும் கிளம்பி நெடுநேரமாயிற்று. சிறையில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொள்ளுமாறு கதவுகளைத் திறந்து வெளியே அனுப்பவேண்டிய நேரமும் ஆயிற்று.
கைதிகள் வெளியேறிக்கொண்டிருந்தனர். 103 ஆம் எண் கைதி மட்டும் வெளியேறவில்லை. “ஏய்! 103, என்ன செய்கிறாய்? வெளியே வா" என்றான் சின்னசாமி. அவன் வெளியே வரவில்லை: குப்புறப் படுத்துக்கிடந்தான். அவனை இழுத்துத் தூக்கி உட்காரவைத்தான் சின்னசாமி. கண்கள் இரத்தம் ஒழுக்குவதுபோல் சிவந்து கிடந்தன. ஏக்கத்தோடு பேசினான்.
L
Ꮒ
"மார்ச்சு மாதம் பதினைந்தாம் தேதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?
66
66
ஏன்?”
அன்றுதான் எனக்கு நிம்மதி. என்னைத் தூக்கிலே போடும் நாள். தூக்கிலே போடுவதற்கு மகிழ்கின்றேன். இன்னும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றனவே என்று எண்ணி எண்ணித்தான் நொடி நொடிதோறும் சாகின்றேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன ஐயா!”