உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முற்பகலும் பிற்பகலும்

"ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா என் மகனை! கொன்றா போட்டாய்!" என்னும் கூச்சல் சிறைக் கம்பிகளைத் தகர்த்துக்கொண்டு வருவதுபோல் வந்தது.

உறக்கத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சிறைக் காவலன் காளையைத் தட்டி எழுப்பிவிட்டது குரல். கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து “இந்த பெண்மணி இங்கே வந்ததுமுதல் காண்டுவா மகனை: கொண்டுவா மகனை காண்டுவா மகனை' என்று கத்திக் காண்டே இருக்கிறது. இரவு பகல் எப்பொழுதும் ஓய்வதே இல்லை. கிறுக்குப் பிடித்துப்போய் உளறுகிறது. என்ன அநியாயம் செய்து தொலைத்ததோ? என்ற உறக்கம்போன முணுமுணுப்போடு பேசினான்.

"அவரவர் செய்த காரியங்கள்தான் வினை. அவர்கள் நல்லது செய்ததையும், பொல்லது செய்ததையும் அனுப விக்காமல் முடியாது. மறு பிறப்புப் பிறந்தோ-வேறு எந்த உலகத்துக்கும் போயோ இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டியது இல்லை. இந்த உலகத்திலேயே அனுபவித்துத்தான் தீரவேண்டும்” என்றான் சிறைக்காவலன் சின்னச்சாமி.

"நல்ல வினைப்பயன்! நாம் என்னென்ன கொடுமைகள் செய்தோமோ? இந்தச் சிறைக் கூடக் காவலாளியாகி அழுகை, ஒப்பாரி, கண்ணீர், கலங்கல் இவற்றுக்கு இடையிலேயே நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது. சே! சே! நல்ல வேலை இது. அதிலும் இந்தக் கிறுக்குப் பெண்மணி வந்ததுமுதல் உறக்கமே கிடையாது. உறக்கமில்லாத் துயர் நம்மையும் கிறுக்கர்களாக்கிவிடுமோ என்னவோ?” என்று அவள் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் ஒன்றுசேர்த்துக் கூறினான்.

“காளை! இவள் எப்படியும் பெருங் கொடுமைக்காரியாகத் தான் இருந்திருக்க வேண்டும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா. பிற்பகல் தாமே வரும்” என்பது குறள் உரை. பிறர்க்குக் கேடு முற்பகலில் செய்திருப்பாள்; அதன் பயனைப் பிற்பகலில் அனுபவிக்கிறாள். யாரென்ன செய்வது?”