14
66
"CF ! சே!
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
வன் விளங்குவானா? எப்படி எப்படிப்
ப்
பொல்லாதவர்களெல்லாம் பூமியில் உண்டு. ஆனால் இந்தப் பொல்லாதவனைப்போல் ஒருவனையும் நான் பார்த்ததில்லை. உயிர் ஊட்டிய தாயின் உயிரோட்டிய பாவி உருப்படுவானா? அப்பன் காலிப்பயல்! அவன் மகன் சின்னப்பயல்! நல்லகுடும்பம்! இவர்கள் தலையிலே இடிவிழாதா? எங்கெங்கோ குண்டை போடுகிறார்கள் இவர்கள் தலையில் பார்த்துப் போடக் கூடாதா? கட்டிலிலே கிடந்து துடித்த தங்கம் மனம் என்ன பாடுபட்டதோ? இந்தப் பாவிகள் உணர்வார்களா?" என்று புண்பட்டுக்கூறினான் வேலப்பன்.
66
இதுதான் சந்தர்ப்பம்: தாராளமாகத் திட்டு. நல்லதை வரவேற்கவும் தெரியவேண்டும்: கெட்டதைத் தூற்றவும் தெரியவேண்டும். நீ இப்போது கூறியவாறு இடியோ, குண்டோ அல்ல. இரண்டும் சேர்த்தே விழலாம் இவர்கள் தலையில்! ஆனால் சிதம்பரம் தலையில் விழுந்தால் உனக்கு ஆபத்து இல்லை. அவன் அப்பன் தலையில் விழுந்தால் உனக்கும் ஆபத்து” என்றார் கண்ணுசாமி! வேலப்பனுக்குப் புரியவில்லை. 'ஏன்? அந்தப் படுபாதக அப்பன் வேறா இன்னும் இருக்கிறான் என்றான். “ஆம் இருக்கின்றான்! உயிரோடே இருக்கின்றான்! சாகாமல் தான் இருக்கின்றான்! அவனை யார் என்று கேட்கின்றாய்! அவன் வடிகட்டிய தீயவனான இந்தக் கண்ணுசாமி” என்றார் கண்ணுசாமி!
66
வேலப்பன் தலை சுற்றியது. “கண்ணையா நீர் தங்கத்தின்.... என்று இழுத்தான். “ஆம்! கணவன்தான். ஆனால் அன்பே உயிரெனக் கொண்ட அந்தத் தெய்வத்தின் பெயரையே உச்சரிக்கத் தகுதியற்றவன்!” என்றார் கண்ணுசாமி கண்ணீர் விட்டுக்கொண்டே!
வேலப்பன் கண்ணை
மூடிக்கொண்டே கண் கண்ணு சாமியைப் பிடித்துக் கொண்டான்! இதற்குள் பொம்மை ல்லை இல்லை என்புதோல் போர்த்த உடம்பு எவ்வளவோ தொலை தூரம் போய்விட்டது.
66
‘அன்பின் வழிய(து) உயிர்நிலை அஃதிலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம்பு”