உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

13

சம்மதிக்கவில்லையாம்! வீட்டுக்கு வந்தவள் மருமகளைக் கண்டிருக்கிறாள்! அருமை மகன் அயலூருக்குப் போயிருந்தானாம்! "வந்ததென்ன?" என்று அகங்காரத்தோடு அகங்காரத்தோடு கேட்டாளாம் மருமகள். பதில் பேசுவதற்கு வாயெடுக்கும் முன்னரே தள்ளாடிக் கீழே விழும் நிலைக்கு ஆளான தங்கம் “இருமி”க் கோழையை துப்பியிருக்கிறாள்? கடுமையான காய்ச்சலும் இருந்திருக்கிறது. "சே! சே! தொற்று நோய்! அறிவு கெட்டவள்! புத்தியில்லை! ஒதுக்குப் புறத்திலே கிடந்து சாகவேண்டியதை விட்டு ஊருக்குள்ளே வந்து தொலைகின்றது! மானம் கெட்டு, கெட்டுப் பிச்சையெடுத்து வாழவேண்டுமோ? இன்னும் இருந்து யாரைக் காப்பாற்றப் போகிறது? வெட்கம் கெட்ட கழுதை!” என்று திட்டிக் கொண்டே விரைப்போடு வீட்டுக்குள் போய்விட்டாள் மருமகள்.

மதி

தன்னை யார் என்று தெரிந்துகொள்ளாமலே தெரிய விரும்பாமலே பிச்சைக்காரியாக முடிவு கட்டிக்கொண்டு சென்ற அவளே மருமகள் என்பதைத் தங்கம் அறிவாள். மாமிதான் வந்தவள் என்பதை அறியாமலே மருமகள் திட்டியதில் வியப்பு இல்லை! தெரிந்திருந்தாலும் கிடைக்கும் பெருமை இதுதான்! தங்கம் தன் வலிமையனைத்தையும் ஒன்றுகூட்டி எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள். இந்த இடியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வந்து கட்டிலில் படுத்தவள்தான்! விடியற்காலையில் பார்க்கும் பொழுது அன்புத்தெய்வம் உறைந்த கூடுமட்டுமே கட்டில்மேல் கிடந்தது! தங்கத்தின் முடிவை ஊர் அறிந்தது! இப்பொழுதுபோன எலும்பு தோல் பிணமும் அறிந்தது! இதனைச் சேர்ந்த மனைவியான எலும்பு தோல் பிணமும் அறிந்தது! அறிந்து என்ன செய்ய? ஊரறிய ஒப்புக்கு அழுது. ஒருபிடி சாம்பலாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள்! இப்பொழுது என்னவோ நினைத்து நினைத்து இவன் உருகுகின்றானாம்! ஊர் சொல்லுகிறது; ஆனால் உடல் சொல்லுகிறதா?

66

இவனா வஞ்சம் சூதறியாத பொம்மை! சே! சே! தகுமா? இவனும் இன்னும் வாழத்தான் செய்கின்றான். இவனது மனைவியும் வாழத்தான் செய்கிறாள். ஆனால் இவர்களிடம் அன்பு வாழவில்லை. நடைப்பிணமாக வாழுகின்றார்கள். இது வாழ்க்கையா என்று சொல்லிமுடித்தார் கண்ணுசாமி. வேலப்பன் மூக்கிலே வைத்த விரலை எடுக்காமல் கேட்டுக் கொண்டே இருந்தான்.