12
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
$
66
உள்ளே இருந்து கொண்டே சேவகன் வழியாக ல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டான். இந்த நிலைமையை அறிந்துகொண்ட சேவகன் எப்பொழுது தங்கம் வந்தாலும் சரி "இல்லை" என்றே சொல்லியனுப்பி வந்தான்!
66
66
“ஒடுங்கிப் போயிருந்த தங்கத்தின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. வேலைக்குச் சென்று வயிற்றுப்பாட்டைப் போக்கவும் முடிய வில்லை. உள்ளம் இருண்டுவிட்டது. அப்பொழுதுதான் உலகத்தின் பயங்கரமான நிலைமை அவளுக்குத் தெளிவாகப் புலனாயிற்று. அன்பு, அன்பு என்றே வாழ்ந்த அந்த அன்புப் பிழம்பின் கண்கள் கலங்கின: ஆனால் கண்ணீர் சொட்டக்கூட முடியாத அளவு கண்களில் வறட்சியிருந்தது. மகனைக் கடை சி முறையாகவாவது பாத்துவிட வேண்டும் என்று கருதிப் பக்கத்து வீட்டுக்காரர் வழி சொல்லியனுப்பினாள். போனவர்களும் சிதம்பரத்தின் மனைவியைக் கண்டு பேசவே முடிந்தது. அவளென்ன பெண் தன்மை சிறிதாவது பெற்றிருந்தால் அல்லவா இரக்கம் காட்டுவாள்! அவள் அவனுக்குச் சொல்லவும் இல்லை. சொன்னாலும்கூட மரத்துப்போன அவன் வந்திருக்கவும்
மாட்டான்.
வ
“கட்டிலோடு கட்டிலாகத் தங்கம் கிடந்தாள். ஊணும் ல்லை; உறக்கமும் இல்லை. கயவனான மகன் நினைவு ஒரு பக்கம்; பெற்ற மனத்தின் பெருங்கவலை ஒரு பக்கம்! "தாய் திட்டினால் நெஞ்சம் நைந்தால். பிள்ளை வாழ்க்கை நாசமாகி விடும் என்று அடக்கிக் கொண்டு “தன் வினையை”யே நொந்து கொண்டாள்! அந்தோ! அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டது எலும்புருக்கி நோய்! எத்தனை நாளைக்குத்தான் அதனோடு போரிடுவாள்? எலும்பும் தோலுமாகவே காட்சியளித்தாள்! ஆனால் உள்ளே இருந்த அன்புக்கு மட்டும் குறைவில்லை. சிதம்பரனோ பஞ்சுப் பொதியாக விளங்கினான். ஆனால் உள்ளே அன்புக்குச் சிறிதும் இடமில்லை!
ஆ
தங்கம் தள்ளாடித் தள்ளாடி மகன் இருக்கும் வீட்டுக்கு மருமகள் வீட்டுக்குச் சென்றாள். ஐயோ! பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாதுகாத்தத் தாய்-வீடு பெருக்கி வீதி தெளித்துச் சம்பாதித்துப் படிக்க வைத்தத் அன்னை - சேலையையும், விற்றுச் சட்டை தைத்துத் தந்த உபகாரி-ஓடி ஒடிச் சின்னஞ் சிறு சிட்டுக் குருவிபோலப் பார்க்க வந்து ஏமாந்து சென்ற எழிலோவியம்- இக்கயவனைக் கல்நெஞ்சனைக் காணாமல் உயிரைவிடச்
-