உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

66

11

மகன்”

சமாதானமாக இருந்தாள். திட்டும் பொழுது என்பதனால் பொறுத்துக் கொண்டாள். “பள்ளிக் கூடம் போகிறேன்” என்று பொய் சொல்லி விட்டுப் போய்விடுவான். அடுத்த ஊர்களுக்கு, அதைத் தெரிந்து கண்ணீர் வடித்துக் கொண்டே, “இப்படிச் செய்யாதேடா! நீ நல்லபிள்ளை என்று பெயரெடுக்காவிட்டால் நான் செத்தே போவேன் உன்னைத் திட்ட வாய் வருகிறது! ஆனால் நாக்கையாவது பிடுங்கிக் கொண்டு சாகலாமே ஒழியத் திட்டக்கூடாது என்கிறது மனம்! என்னடா செய்வேன். உனக்காகவே உயிரோடு இருக்கிறேன். என்னை அழவைக்காதே! உன்னை ஆளாக்கி ஒருத்தியைக் கொண்டுவந்து வைத்து விட்டால் என் பாடு முடிந்தது” என்று பொறுமிப் பொறுமிப் புழுங்கிப் புழுங்கித் துடிக்குமாறு செய்துவிட்டான்!

வி

“தங்கம் வேலைபார்த்து வந்த வீட்டிலே தைப் பொங்கலுக் காக ஏழெட்டு ரூபாய்களும், ஒரு சேலைத் துணியும் இனாம் கிடைத்ததாம். ஒற்றைத் துணியன்றி வேறில்லாத அந்த தங்கம், புதுச் சேலையையும் பாதி விலைக்கு எவளோ ஒருத்தி யினிடம் விற்று. இரண்டொன்றாக இருந்த வெண்கலப் பாத்திரங்களையும் விற்றுத் துட்டாக்கினாள்; ஏன் சேர்த்து வைக்கவா? அதுதான் தங்கம் அறியாததாயிற்றே.

ம்

“யாரோ ஒருவர் காலில் விழுந்து பத்து முடித்து மகனுக்கு வேலை ஒன்று வாங்கித் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாளாம் இவள் வற்புறுத்தலையும், குணத்தையும் அறிந்த அந்த நல்லவர் எப்படியோ முயற்சி செய்து தாலூகா அலுவலகத்தில் “எழுத்தர்' வேலை வாங்கித் தந்திருக்கிறார்! வேலைக்கு, நாலுபேரைப் போல் தன் மகனும் போகவேண்டாமா? இதற்காகத்தான் விற்கத் தகாததையும் விற்றுச் சேர்த்து அவனுக்கு முழுக்கால் சட்டையும் கோட்டும் இன்னும் என்னென்னவோ தைத்துப் போட்டு முன்னழகும் பின்னழகும் பார்த்து அனுப்பிவைத்திருக்கிறாள் அலுவலகத்திற்கு நன்றியறிதல் இல்லாத இந்தப் பயல் விளங்குவானா?

“வேலைக்குப்போன ஒரு மாதத்துள் தாய்க்கும் சொல்லிக் கொள்ளாமலே தன்னோடு வேலை பார்த்த ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு அவள் கைப் பொம்மையாகி விட்ட ான் இவன். திருமணத்திற்குப் பின்னால் தாயைப் பார்க்கவே இல்லை. இவன் செய்திகளையெல்லாம் கேள்விப் பட்டு மகனைப்போய் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றாள்.