10
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
“வேலப்பன் கேள்" என்று மேலும் தொடர்ந்தார் கண்ணுசாமி! இப்பொழுது போனானே இவன் பெயர் சிதம்பரம்! இவனுக்கு வயது ஐந்தாக இருக்கும்போது முரடனான இவனது அப்பன் சிறைச்சாலைக்குப் போய்விட்டான். தியாகியாகவா? அந்தக்
கதையே
யே வேறு! இந்தப் பயலுக்கு இவனது அம்மாதான், அப்பா, சொந்தம், சொத்து எல்லாம். அந்த அம்மா தங்க மானவள்! பேரும் தங்கம்தான்! பாவம், கணவன் சிறைக்கூடம் போன குறை அவளைவிட்டு நீங்கவில்லை! அதிலும் கெட்ட பெயரெடுத்து அதனால் சிறைச்சாலை போன கேவலத்திற்கு மிகவும் அஞ்சினாள். மானமே பெரிதென வாழ்ந்த அந்த அம்மாளுக்குக் கணவனே தெய்வம் என்றால் கதையல்ல! அவளுக்கு உண்மையாகவே கோவில்கட்டிவைத்துக் கும்பிடலாம்! அவ்வளவு நல்ல குணம்.
66
கணவன் நிலைமையை எண்ணி எண்ணிப் பார்த்து ஏக்கத்தோடே வாழ்ந்த தங்கம் நாளாசாரியாக இளைத்துக் கொண்டே வந்தாள்! சிதம்பரத்திற்காகவே ஏதோ ஒருவாறு உயிரை தாங்கிக்கொண்டு இருந்தாள் என்று சொல்லலாம்! சிதம்பரத்திற்குத் தங்கம் போன்ற அன்புத்தாய் நிச்சயம் கிடைக்கக் கூடவே கூடாது. அதுபோலத் தங்கத்திற்கும் சிதம்பரம் போன்ற பிள்ளையும் பிறந்திருக்கக்கூடாது.
தங்கம், “நான்குபேர் போலச் சிதம்பரமும் இருக்க வேண்டும்" என்று கருதினாள். பள்ளி கூடத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பன் தேடி வைத்த செல்வம் துளியும் இல்லை. ஆனால் சிறைக்குப் போகுமுன் ஏற்றிவைத்த கடன்சுமையோ மிகுதி. தங்கம் நான்கு வீடுகளை பெருக்கித் தெளித்து, மாவாட்டிப் பெற்ற காசால் மானத்தோடு வயிறு வளர்த்துக் கொண்டு இவனையும் படிக்க வைத்தாள். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டித் துளிதுளியாகச் சேர்த்து கொண்டு இவனைப் பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்திருக்கிறாள். இதற்குள் அவள் பட்டபாட்டை அவளே அறிவாள். வேறு யார்தான் அறியுமாறு இருந்தார்கள்!
“பயல், தங்கம் இல்லாத நேரம் பார்த்து அவள் சேர்த்து வைத்திருந்த காசிலே திருடி தின்பதற்கும் ஆரம்பித்தான்; அரிசியை அள்ளி அவள் அறியாமலே விற்றுவிட்டு ஊர் சுற்றினான் தாயையும் கண்டபடி ஏசினான், பேசினான். அந்த அன்புத்தாய் அத்தனையையும் பொறுத்துக் கொண்டாள். திருடிய பொழுதெல்லாம், "ஐயோ! போகிறான் எனச்
و,