உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

9

பொம்மையைக் கண்டது பழைய நாட்கதை: ஆனால் இப்பொழுது தெருவில் வந்த ஒருவனைக் கண்டதாலேதான் வேலப்பன் முன்பு கண்ட பொம்மையை நினைத்துக் கொண்டான். "நல்ல உயரம்; விரிந்த மார்பு; சரிந்த தொந்தி; ஏறிய தோள்; உப்பிய கன்னம்; யானை நடை; பொது நிறம்; திருக்கு மீசை; உடற்புறத்தையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மெல்லிய ஆடை; அடர்ந்து சுருண்ட மயிர்; கடுகடுத்த முகம்” இவையனைத்தும் கூடிய ஒருருவம் தான் வந்த உருவம்! இதனைக் கண்டவுடன் பொம்மை ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்றால், அந்தப் பொம்மைக்கு உயிரில்லை: இந்த உருவத்திற்கு உயிர் உண்டு: அவ்வளவே வேற்றுமை! இவ்வுருமைக் கண்டுதான் அப்பொம்மையைச் செய்தானோ என்னவோ?

66

"இதோ அவரைக் கொல்லைப் பொம்மை" என்று வந்த உருவத்தைக் காட்டிக்கொண்டே கூறினான் வேலப்பன். “சும்மா இரு! போய்த் தொலையட்டும்" என்று சொல்லிக்கொண்டே வேலப்பனுக்குப் பின்னால் போய் மறைந்து கொண்டார் கண்ணுசாமி. அந்தப் பொம்மை உருவம் அடியடியாகப் போய்க்கொண்டிருந்தது: நல்ல இளமைதான்! இருந்தாலும் உருவத்தில் சுறுசுறுப்புக்கு இட டம் ம் ல்லாமல் போய்விட்டது! என்ன செய்வது?

வேலப்பன் ஒரு செல்வன்; அவனது கடைக் கணக்குப் பிள்ளைதான் கண்ணுசாமி! வேலப்பனது தந்தையின் வயதை ஒத்த வயது கண்ணுசாமிக்கு இருக்குமாதலால்” கணக்கையா என்று அழைப்பதே வழக்கம். அதனால் “கணக்கையா! அவனைக் கண்டவுடன் ஏன் என் பின்னால் மறைந்துகொள்ள வேண்டும்! அந்தப் பொம்மை உங்களுக்குத் தெரியுமா?" என்றான் வேலப்பன்.

"பொம்மை என்று சொல்லாதே! பொம்மை பாவம் உணர்ச்சி இல்லாதது! யாருக்கும் கெடுதல் செய்யாது; நன்மையும் செய்யாது; அன்பும் கிடையாது; வன்பும் கிடையாது. ஆனால் இதோ பொம்மை அன்று! எலும்பும் தோலும் போர்த்த உடம்பு! இவ்வுடம்பில் உயிர் உண்டு! ஆனால் உயிர் இருப்பதை வெளிக்காட்டக்கூடிய அன்பு மட்டும் இல்லை. மாறாக வன்பு உண்டு! பிறர் துன்பத்தை அறியாது; அழிவுக்கு அஞ்சாது. அறத்திற்குப் பணியாது இந்தப்பொம்மை சே சே! வயிற்றுப் பாட்டுக்காக வாள் வாள் தூக்கிக் தூக்கிக் கொல்லவும் துணியும் இக் கொடுமைப் பிண்டம் பஞ்சுப் பொம்மையா? வஞ்ச மூட்டை!” என்று பொங்கிக் குமுறினார் கண்ணுசாமி! வேலப்பன் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.