உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

4. உருவும் நிழலும்

யாழ்ப்பாணத்திலே அறிவானந்த நிலையம் தோன்றியது பெருவியப்பாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கட்டிடம் மூன்றடுக்கு மாளிகையாகிவிட்டது என்றால் வியப்புத்தானே! அதற்கு முன் செல்வங்கொழித்துக் கொண்டு இருந்த துணிக்கடைகள் எல்லாம் அறிவானந்த நிலையம் தோன்றியபின் படுத்து விட்டன. அவர்களுக்கெல்லாம் அறிவானந்த நிலைய எழிலையும், விற்பனையையும் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது.

66

‘அறிவானந்த நிலைய வளர்ச்சிக்குக் காரணம் அறிவானந் தரின் பணம் மட்டும் அன்று, குணமுந்தான்” என்று கூறாதவர் இல்லை. அறிவானந்தர் பெரும்பாலும் “கல்லா”விலேதான் உட்கார்ந்திருப்பார். “ஐயா, வாருங்கள்; வாருங்கள், ஏ! பையா! ஐயாவை உட்காரச் சொல்; என்னய்யா, ஐயாவைச் சீக்கிரம் கவனித்து அனுப்பும்” என்று வந்தும் வராதும் இருக்கும்போதே ‘தடபுடலாக மரியாதைச் சொற்களை அள்ளி வழங்குவார்.

“என்னங்க அம்மா! வாங்க, வாங்க! என்ன நெடு நாட்களாக இந்தப்பக்கம் காணவே இல்லையே! பையா! ஏண்டா நிற்கிறாய்; அம்மாவைக் கவனி என்று எத்தனையோ ஆண்டுகள் வாடிக்கைக்காரர் போன்று பேசுவார். அவர் அன்பு மொழிகளிலும், அமைந்த விழிகளிலும், புன் சிரிப்பிலும் அமையாது இருக்க எவரும் முடியாது. அறிவானந்த நிலையத்திற்குள் நுழைந்து துணி எதுவும் எடுக்காமல் போகவேண்டுமானால் “நான் இந்தக் கடையில் எதுவும் எடுக்கப் போவதே இல்லை; சும்மா சுற்றிப்பார்க்கவே வந்தேன்” என்னும் நோக்கம் உடையவராகவே இருக்கவேண்டும்.

அறிவானந்த நிலையம் தோன்றி ஐந்தாண்டுகள் நிறைந்து விட்டன. அன்று புதுக் கணக்குப் போடும் நாள். கடையில் இருந்த பரபரப்பையும் வரவேற்பையும் சொல்லிமுடியாது. வாடிக்கைக்காரர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புதுக்கணக்குக்குக் கொண்டு வந்திருந்த ரூபாய்களை எண்ணிப்