திருக்குறள் கதைகள்
25
பார்த்து எழுதிக்கொள்ளவே கணக்கரால் முடியவில்லை. அன்று அறிவானந்தர் கல்லாவிலேயா உட்கார்ந்திருந்தார்? ஐம்பது வயதைத் தொடும் அவர் பதினைந்து வயதுக் குமரனாக அல்லவோ கடை முழுவதும் ஓடியாடித் திரிந்தார். அன்று நிலையத்திற்கும் பெருஞ் செலவு; கூட்டமும் பெருத்த கூட்டம்.
புதுக்கணக்குக்கு வந்தவர்களுள் சந்நியாசியும் ஒருவர் இருந்தார். எடுப்பான தோற்றமும், காவியுடையும், உருத்திராக்க மாலையும், திருநீற்றுப் பூச்சும் எல்லோரையும் கவர்ந்தது. அவரும் புதுக்கணக்குப் போட வந்தவர்களுள் ஒருவராக இருந்தபடியால் “அடிகளே முதல் கணக்கை எழுதட்டும்” என்று கூறி அவரைப் பெருமைப் படுத்தினர். “ரூபாய் 100" என்று எழுதிப் புத்தம் புதிய நோட்டு ஒன்றினை அறிவானந்தரிடம் தந்தார். கூட்டம் வியப்படைந்தது. ஆமாம்! தெருவெங்கும் அரிசியும் காசும் வாங்கித் திரிந்த திருவோட்டுச் சந்நியாகி, புதுக்கணக்குக்கு ரூபாய் 100 எழுதுகிறார் என்றால் நடக்கும் செயலா? அறிவானந்தர் மெய் மறந்து போய்ச் சந்நியாசியையே நோக்கிக் கொண்டிருந்தார். பணத்தைப் பெட்டியினுள் வைப்ப தற்குக்கூட நினைவு இன்றி இருந்தார். அவர் முகத்தில் இருந்த வியப்புப் போய்த் திகைப்பு ஏற்பட்டதை அங்கிருந்த பலர் அறியமுடியாமல் போய்விடவில்லை.
சந்நியாசி போட்டிருந்த கையெழுத்தைப் பார்க்கப் பார்க்க என்னவோபோல் இருந்தது. உள்ளம் ஊசலாடியது; பேரதிர்ச்சி ஒன்று உருவாகியது. இருப்பினும் ஒருவாறு சமாளித்து. காண்டு காரியங்களைக் கவனித்தார். உணர்ச்சியற்ற பொம்மையின் நடமாட்டமாக அவர் நிலை இருந்ததே அல்லாமல் உணர்வுடைய அறிவானந்தராக அவர் இருக்க வில்லை. புதுக்கணக்கு முடிந்தது. அறிவானந்தரின் அமைதியும் தொலைந்தது. எப்பொழுதும் சந்நியாசியின் உருவம் கண்முன் நின்றுகொண்டே இருந்தது. ஓரொரு வேளை மறந்தாலும், கல்லாவுக்கு வந்தவுடன் கையெழுத்து சந்நியாசியை நினை வூட்டத் தவறுவது இல்லை.
66
ஐயா, புதுக்கணக்குக்குப் பின் உங்கள் நிலைமை ஏதோ ஒருவாறு இருக்கிறது. முன்னைப்போல் மகிழ்ச்சியாக நீங்கள் இருக்கவே இல்லை. உண்பது உறங்குவதுபற்றிச் சிறிதும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை; எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்றார் கணக்கர்.