26
66
இளங்குமரனார் தமிழ்வளம் - 8
“ஒன்றும் இல்லை; ஒன்றும் இல்லை” என்று மழுப்பினார் அறிவானந்தர்.
66
"ஏதோ இருக்கிறது, மறைக்கிறீர்கள்” என்றார் கணக்கர். "உலகமே இப்படித்தான் இன்பமும் துன்பமும்” பேச்சை முடிக்காமலே பெருமூச்சுவிட்டார் அறிவானந்தர்.
கண்டுபிடிக்கவும்
உங்களைப் பல நாட்களாகப் பார்த்து வருகிறேன். எனக்கு மிகுந்த வேதனையாகவே இருக்கிறது. என்ன காரணம் என்று முயன்றேன் "யாரும் என் அறைக்கு வரக்கூடாது” என ஆணை பிறப்பித்திருந்தாலும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காகப் பல நாட்கள் இரவுப்பொழுதுகளில் தங்கள் அறைப்பக்கம் ஒளிந்து இருந்திருக்கிறேன். “சந்நியாசி சந்நியாசி " என்றும், 'கோவிந்த தேவ்” என்றும் உளறினீர்கள். அந்தச் சந்நியாசியைக் கண்டது முதல் தான் உங்கள் வாழ்வில் கலக்கத்தைக் காணுகின்றேன். அவனைக் காணும் போதெல்லாம் புலியைக் கண்ட புள்ளி மான்போல் அஞ்சி ஒடுங்குகிறீர்கள்.' என் று இரக்கமும் அழுத்தமும் சேரக்கூறினார் கணக்கர்.
கணக்கர் வேலைக்கு வந்து ஐந்தாறு மாதங்கள் கூட ஆகாவிட்டாலும் கடைச் சிப்பந்திகளில் எவருக்கும் இல்லாத அளவு அறிவானந்தரிடம் சலுகையும் உரிமையும் உண்டு. முதலாளியினிடத்துத் தொழிலாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்க எங்கோ அலையவேண்டாம். அறிவானந்தர் கடையில் இருக்கும்போது கணக்கர் நல்லுசாமி நடந்து கொள்ளும் முறையை ஒருநாள் இருந்து பார்த்தால் போதும்; இத்தகைய கணக்கரைப் பிடிக்காமல் போகுமா?
“கணக்கரே! எனக்கும் சந்நியாசிக்கும் என்ன இருக்க முடியும்? அவனைக் கண்டு அஞ்ச வேண்டியது என்ன இருக்கிறது? என் மேலுள்ள அன்பால் கேட்கிறீர்; நான் என்ன அதனை அறியமாட்டேனா? நம் கடைக்கு வந்து போகும் சந்நியாசி, உண்மை சந்நியாசியல்லன்; பெரிய கொள்ளைக் காரன்; அவனைப் பகைப்பதும் கேடு; அவனை உறவாக்கிக் கொள்வதும் கேடு. அவனைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமலே ஒரு படபடப்பு உண்டாகத்தான் செய்கின்றது. என்ன செய்வது” என்று பேச்சைச் சுருக்கிக்கொண்டார் அறிவானந்தர்.
அறிவானந்தர் பேச்சுக்குக் கணக்கர் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாரே ஒழிய, "உண்மை" என்று அவருள்ளம்