திருக்குறள் கதைகள்
27
ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும், மேலும் கேட்பது தவறு என்று விட்டுவிட்டார்.
சில நாட்களாகச் சந்நியாசி கடை க்கு வரவில்லை. அறிவானந்தர் சற்று அமைதியாகக் கூட இருந்தார். ஆனால் அவ்வமைதி நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில், அறிவானந்தரின் குளிப்பறைக்கு முன்னால் வந்து நின்றார் சந்நியாசி. இதனை ஆனந்தர் எதிர்பார்த்திருக்கமாட்டார்!
66
"என்ன இங்கே?" என்று படபடப்புடன் கேட்டார். சந்நியாசியைக் கோபத்துடன் கேட்ட முதல் கேள்வியே இதுதான். சந்நியாசி சிறிதும் பொருட்டாக நினைக்கவில்லை. புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே " அவசரம் இல்லாமல் இல்லை; உங்களைச் சில நாட்களாகப் பார்க்க முடியவில்லை. பார்க்க வேண்டும்போல் இருந்தது; வந்தேன்; தொல்லைக்கு மன்னிக்க வேண்டும்; நலம்தானே” என்றார்.
“நலத்திற்கு ஒன்றும் வந்துவிடவில்லை” என்று சிறிய துண்டால் பெரிய தொப்பையை மறைத்துக் கொண்டு தம் அறைக்கு விரைந்தார். சிறிய துண்டு தொப்பையில் பரவிக்கிடந்த அகன்ற மச்சத்தை மறைத்து விடவில்லை. சந்நியாசியின் முகத்திலே அதற்குமுன் இல்லாத தெளிவு ஒன்று நடனமாடியது. காணாததைக் கண்டவர்போல் களிப்புடன் நடந்தார்.
·
அறிவானந்தர் உடல் ஆட்டம் கண்டுவிட்டது.அச்சத்தினால் காய்ச்சலும் நோவும் தலைதூக்கி விட்ட ன. பல நாட்கள் படுத்துவிட்டார். தனியறையை விட்டு வெளியேறுவதே இல்லை. உலகம் ஒரே இருள் மயமாகவே தோன்றியது. எத்தனை எத்தனையோ வாடிக்கைகாரர்களோடு முகமலர்ந்து பேசி இன்புற்ற வாழ்வு மூலையிலே முடங்கிவிட்டது.என்னென்னவோ பழைய நினைவுகள் கிளம்பிச் சாக்காட்டுப்பறை அடித்தன. இன்னும் இங்கிருக்க வேண்டாம்; இருந்தால் சந்நியாசி விட மாட்டான். "உயிர் பெரிதா? பொருள் பெரிதா?" என்று சிந்தித்தார். “ஒரே முடிவு ஓடினால் அன்றித் தப்பிப் பிழைக்க முடியாது." என்று மாடியிலிருந்த தனி அறையிலிருந்து உள் வாசல் வழியாகக் கடைக்கு வந்தார். எப்பொழுதும் கடைக்குள் திடுமென நுழையமாட்டார். கடைமுழுமையையும் வெளியே யிருந்து உற்றுநோக்கியறிந்து கொண்டுதான் நுழைவார். அதற்கு உதவியாக இருந்தது கதவு இடுக்கு ஒன்று.
-
வழக்கம்போல் கடையை உற்று நோக்கினார். மயிர்க் கூச்செறிய நின்றார். காரணம் கணக்கரோடு சந்நியாசி நின்று