28
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
ய
கொண்டிருந்தார். அறிவானந்தர் துளைவழி நோக்குவதைக் கணக்கரின் பூனைக் கண்கள் நொடிப்பொழுதில் கண்டுவிட்டன. சந்நியாசியினிடம் ஏதோ கூறிவிரைவாய் அனுப்பிவிட்டார் கணக்கர். அனுப்பும்போது ஒரு காலோடு மற்றொரு காலைச் சேர்த்து ‘டக்’ என்று அடித்து வலக்கையை நெற்றிக்கு நேராகத் தூக்கி விரைப்பாகச் செலுத்திய வணக்கம் அறிவானந்தரை அசைத்தது. "என்னைத் துயர் சூழந்துகொண்டு விட்டது. எவன் ஒருவனுக்குச் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்று எண்ணினேனோ, அவனே சந்நியாசிக்குத் துணையாளனாகவும் இருக்கிறான்; எவரிடமும் சொல்லாமல் ஓடிவிடுவதே வழி” என்று துணிவு கொண்டார்.
வ
கல்லாவுக்குப் போகாமலே பின்பக்க வழியாகக் கடையை விட்டு வெளியேறினார். ஈழத்திலிருந்து புறப்பட்ட கப்பல் தனுக்கோடியை அடைந்தது; கப்பலிலிருந்து இறங்கியவர்கள் சுங்கச் சாவடிக்கு நடந்தனர். அறிவானந்தரும் நடந்தார். வேறு வழியாகவும் போய்விடலாம் என்றும் எண்ணினார். வழி யொன்றும் தெரியவும் இல்லை. மாற்று வழியில் போனால் எவரேனும் சந்தேகப் படக்கூடும் என்னும் எண்ணமும் தலை தூக்கியது. சுங்கச்சாவடியின் வாயிலிலே சந்நியாசி நிற்பார் என்று எண்ணியிருப்பாரேயானால் கப்பலில் வரும்பொழுதே கடலில் வீழ்ந்து தப்பியிருப்பார் அல்லது செத்திருப்பார். சந்நியாசியும் கணக்கரும் தான் வந்த கப்பலின் அடித்தளத்திலே தான் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டாரே!
சந்நியாசியைக் கண்டவுடன் ஓடித் தப்புவதற்குத்தான் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குள் “மன்னிக்க வேண்டும்; இந்த நாட்டின் சட்டப்படி உங்களைக் கைது செய்கிறேன்” என்று கொண்டு சீட்டியடித்தார். கைவிலங்குடன் வந்தார் கணக்கர். அறிவானந்தர் அமைதியாகிவிட்டார். ஆரவாரித்துக் கிடந்த உள்ளக்கடல் அமைதியாயிற்று. “இனி தப்பமுடியாது” என்பதே அமைதிக்குக் காரணம்.
“என் கடமையை நிறைவேற்றுவதற்காகவே உங்கள் கடைக் கணக்கனாக வந்தேன். மன்னிக்கவேண்டும். நான் துப்பறியும் துறையில் பணிபுரிபவன். இவர் எங்கள் அதிகாரி” என்று சந்நியாசியைச் சுட்டிக் காட்டினார் கணக்கர்.
“எல்லாம் விளங்குகின்றது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அறிவானந்தர்.