42
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $
“கணக்குப் பாடத்தில் நம் மாநிலமே அன்றி இந்தியக் கண்டத்திலேயே மாதவன் முதல்மாணவனாகத் தேறியுள்ளான். அவனால் நம் பல்கலைக்கழகம் சிறப்படைந்தது. அவன் கற்று வந்த உங்கள் கல்லூரியை வாழ்த்துகின்றோம்" என்று எழுதி இருந்தனர். மாதவன் புகழ் மேலும் ஓங்கியது.
வேலை பார்க்க
மாதவனுக்கு ஏதாவது வேண்டும் என்னும் எண்ணம் வந்தது. வீடு அந்நிலைமையில் இருந்தது. அரசாங்கத்திற்கு மனுச் செய்தார். எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் வேலை தேடிவந்தது. வேலை கிடைத்துவிட்டது என்று இறுமாந்து விடவில்லை. மேலும் மேலும் முன்னேறுவ தற்குத் தக்க வழிகளைத் தேடிக்கொண்டு வந்தார். கடமைகளைச் சிறிதும் தவறாது உடனுக்குடன் கவனித்தார். இரண்டோர் ஆண்டுகளிலே அவர் செயலாற்றலை அறிந்த அரசினர் துணைக் கலெக்டர் வேலைக்குத் உயர்த்தினர்.
மாதவன் போய் வேலைபார்த்த மாவட்டத்திலே அவ் வாண்டு பெருத்த மழை பெய்து ஒரே வெள்ளக்காடாகியது; பல ஊர்களும், தோப்புகளும், தோட்டங்களும் வெள்ளத்தால் இழுக்கப்பட்டு அழிந்தன. மக்கள் தப்பிப் பிழைக்கும் வழி அறியாது திண்டாடினர். வெள்ளத்தின் இடையே சிக்கிப் பல்லாயிர மக்கள் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் இருக்கும் இடம் ஒருவர் அறியாமல் உற்றார் உறவினர் அலறித்தவித்தனர்.
வள்ளப் பகுதிக்கு மாதவன் ஓடோடிச் சென்றார். உதவிச் செயல்களை உடனுக்குடன் செய்தார். உணவு, உடை, உறைவிடம் முதலானவற்றுக்குச் சங்கடப்படாதவாறு என் னென்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் குறைவின்றிச் செய்தார். வெள்ளம் சில நாட்களில் வடிந்தது. ஆனால் மக்கள் உள்ளங்களிலே மாதவன் நிறைந்தார். அரசாங்கம் மாதவன் பணியைப் பாராட்டியது. உடன் அதிகாரிகளும் வியந்தனர்.
மாதவன் உடனடியாகக் கலெக்டர் பதவிக்கு உயர்த்தப் பட்டார்; வேறு மாவட்டத்திற்கு மாற்றவும் பட்டார். அவர் பதவி வகித்து வந்த மாவட்டத்தினர் “பாராட்டு விழா” ஒன்று நடத்திப் பிரியாவிடை தந்தனுப்பினர். புதிதாகப் பதவி ஏற்கப்போகும் மாவட்டத்தில் இருந்த அதிகாரிகளும் மாதவன் செயல் திறனையும், நல்லுள்ளத்தையும் அறிந்து சிறப்பான வரவேற்புத்தர
எண்ணினர்.