உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கதைகள்

43

மாதவன் கலெக்டர் பதவி ஏற்றுக்கொண்ட அன்று வரவேற்பு விழா” நடந்தது. மாதவனைப் பாராட்டி “வரவேற்பு இதழ்" ஒன்றும் தாயரித்திருந்தனர். மிகக் கிழவரான ஒருவர் ஓர் இளைஞரைப் போல் மிடுக்குடன் மேடைக்கு வந்தார். அவர் கையிலே வரவேற்பிதழ் இருந்தது.

துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலேயே கொள்ளை கொள்ளையான

அறிவு கவரப் பெற்றவர் என்றும், கணித மேதை என்றும், குணக்கடல் என்றும் வியந்து வியந்து பாராட்டிப் பேசினார்.

இவற்றைக் கேட்க கேட்க மாதவனுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது; நா தழு தழுத்தது; கண்களில் நீர் மல்கியது; நாடியும் விரைந்து துடித்தது; வரவேற்பிதழ் வாசித்து முடித்தவுடன், அவரைப் பார்த்து “ஐயா, நீங்கள் நன்னகர் வட்டத்திலே சில ஆண்டுகளுக்கு முன் தாசில்தாராக இருந்தீர்களா?" என்றார் மாதவன்.

66

66

ஆமாம்” என்றார் வரவேற்பிதழ் படித்த முதியவர். என்னைத் தெரிகிறதா? தாங்கள் மறந்திருக்கக் கூடும். நான் மறந்துவிடவில்லை. இந்த நிலைமைக்கு நான் வரக்காரணமாக இருந்தவர்களே நீங்கள்தான்

உளமுவந்து பாராட்டினார் மாதவன்.

என்று

கிழத் தாசில்தாருக்குக் கலெக்டர் புகழ்ச்சொல் கேட்டு மகிழ்ச்சி தாங்கவில்லை. “ஐயா! எனக்கு ஒன்றும் புரியவில்லை! என்னை முன்னாகப் பார்த்திருக்கிறீர்களா? மறந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்று கையெடுத்து வணங்கினார். று

“கிராம அதிகரி ஐயப்பன் மகன், மாதவன் நான்” என்றார் கலெக்டர் மாதவன். முதியவர் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. அவரால் நிற்கக் கூட முடியவில்லை. அருகில் இருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்துகொண்டார்.

தாழப்போட்ட தலையை நிமிர்த்தக்கூட அவரால் முடிய வில்லை. “முட்டாள் மாதவன்” நினைவில் நின்றான். “மேதை மாதவன் மேடையில் நின்றான்! இடையே தத்தளித்துக் கொண்டிருந்தார் முதிய தாசில்தார்!

66

“எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியாந் திண்ணியர் ஆகப் பெறின்”