திருக்குறள் கதைகள்
45
புலவர் வருகையை அறிந்தார் அரசர். அலங்கரிக்கப் பட்ட குதிரை வண்டி ஒன்றினை அனுப்பிவைத்து சிறப்பாக அழைத்துவரச் செய்தார்; புலவர் அரண்மனையை அடுத்து வரும்போது எதிரே சென்று இருகையும் கூப்பி, இன்னுரை கூறி நன்முறையில் வரவேற்றார். அரியணையை அடுத்திருந்த ஆசனம் ஒன்றில் அமரச்செய்து அளவளாவிப் பேசினார். பொன்னும், பொருளும் தந்து பெருமைப்படுத்தினார். புலவர்கள் இடையே, புலவர் கண்ணப்பர் கல்விச் சிறப்பு, பண்பு நலம் ஆகியனப் பற்றி எடுத்துரைத்தார். “எனக்கு இளம் பருவந்தொட்டே ஆசிரியராய் அருமைத் தந்தையாய் இருந்து வருபவர் புலவர் கண்ணப்பர். அவர் பொன்னடிகளை நினைத்துப் போற்றாத நாள் இல்லை. என்று வியந்துரைத்தார்.
""
இவற்றையெல்லாம் அருகில் இருந்து அறிந்த எல்லப்பனுக்குப் புலவர் கண்ணப்பர் புகழ் முன்னையிலும் பன்னூறு மடங்கு மிகுதியாகப் புலப்பட்டது. இவரை ஆசிரியராக அடையும் பேறு பெற்றேன்” என்று தனக்குள் மகிழ்ந்துகொண்டான்.
66
நாட்கள் சில சென்றன. கண்ணப்பர் ஊருக்குப் புறப் பட்டார். அரசர் தேரொன்றை அனுப்பிவைத்துப் புலவரைக் கொண்டுபோய் ஊரில் விட்டு வருமாறு ஏற்பாடு செய்தார். எல்லப்பனுக்கு இருந்த கொண்டாட்டம் இவ்வளவு அவ்வளவா? அவனும் கண்ணப்பரோடு தேரில் ஏறிக்கொண்ட ல்லையா? நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்!
ான்
கண்ணப்பர் வீட்டுக்கு வந்தபின் தனியறை ஒன்றுக்குச் சென்றார். அமர்ந்து இறைவனைப் பற்றி இரண்டு மூன்று இசைப்பாடல்கள் பாடினார்; யாழினை மீட்டி உள்ளம் உருகினார்; சிறு பொழுது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார். தலை தரையிலே படக் கீழே வீழ்ந்து இறைவனை வணங்கினார். இவற்றையெல்லாம் எல்லப்பன் காணத்தவற வில்லை. அவனுக்குப் புலவரை அரசர் வரவேற்று வணக்கம் செய்ததும், புலவர் கடவுளைத் தாழ்ந்து வணங்குவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் மனக்கண் முன் நின்றன. பெரும் புலவரான கண்ணப்பர் இறையன்பிலே ஊன்றிப்போய் நின்றான் எல்லப்பன். “என்னப்பா! இப்படி ஒரே பார்வையாய் எதனைப் பார்க்கிறாய்?” என்று கண்ணப்பர் கேட்டபோதுதான் எல்லப்பன் தன்னினைவுக்கு வந்தான். “வேறு ஒன்றும் இல்லை ஐயா; தாங்கள் செய்த இறை வழிபாட்டை நினைத்துத்தான்...' என்று அமைதியாகக் கூறினான் எல்லப்பன்.