46
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 8
“கல்வியறிவு தந்த ஒரு செயலுக்காகச் செல்வ வளமிக்க அரசர் எவ்வளவு மரியாதை காட்டினார்? நீ அதை நேரில் கண்டாய் அல்லவா! சிற்றுதவிக்கே அவ்வளவு மரியாதை என்றால் வற்றாத வளமும், வளமான பேரறிவும் தந்த கடவுளை வாழ்த்த வேண்டாமா? உள்ளம் ஒன்றி வணங்கவேண்டாமா? அருட்கடலாகவும், அறிவுக் கடலாகவும் இருக்கும் இறைவனை வாழ்த்தி வணங்காத உயிர்கள் உயிர்களா?” என்றார்.
"எல்லாவுயிர்களும் இறைவனை வணங்கி நன்மை பெற வேண்டும். ஆனால் அறிவுணர்ச்சி குறைந்த உயிர்கள் என்ன செய்யக்கூடும் ஐயா” என்றான் எல்லப்பன்.
66
'எல்லப்பா! நல்லதே கேட்டாய். அற்பமான உயிர்கள் என்று நாம் நினைப்பவை கூட இறைவனை ஒவ்வொரு வழியில் வணங்கவே செய்கின்றன. அவை வணங்க அறியாமலோ, தெரியாமலோ இருந்தாலும் குற்றமில்லை. ஆனால் அறிவது அறிந்து, பகுத்துணரும் ஆற்றல் பெற்ற மனிதர்கள் கடவுளை வணங்கத் தவறலாமா? அவர்களினும் கற்றறிந்தவர்கள் கட வுளை வணங்கத் தவறலாமா? வணங்கத் தவறினால் கற்றதால் ஏற்படும் பயன்தான் என்ன? அறிவுடையவன் அறிஞனைப் போற்றுதல் முறைமை; அறிஞன் பேரறிவனாம் இறைவனை வழிபடுதலும் முறைமை; இதனைத் தவறவிடலாமா?” என்றார் புலவர் கண்ணப்பர்.
"ஐயா, மன்னிக்க வேண்டும்; தாங்கள் கூறும் மொழிகள் எனக்கு ஒரு பாடலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. உங்கள் முன்னால் அதனைச் சொல்வதற்கு வெட்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது” என்று தயங்கினான் எல்லப்பன்.
L
“இதில் என்னப்பா, அச்சத்திற்கும் வெட்கத்திற்கும் மிருக்கிறது; தயக்கமில்லாமல் சொல்லு” என்றார் கண்ணப்பர். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”
என்றான் எல்லப்பன்.
“அழகு! அழகு! திருக்குறளில் உனக்குப் பயிற்சியுண்டா?” என்றார் புலவர்.
“ஏதோ கொஞ்சம் பயிற்சி உண்டு ஐயா! அவ்வப்போது சில பாடல்களை வரப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால்