உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

47

தெளிவு காண முடியவில்லை” என்று தலை தாழ்த்திக் கொண்டு கூறினான் எல்லப்பன்.

"பரவாயில்லை! திருக்குறளை வரப்படுத்தியிருக்கிறேன்” என்று கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருக்குறள் வாழ்க்கை நூல். இப்பொழுது வரப்படுத்திக்கொண்டால் அப் பாடல்கள் வாழ்நாளெல்லாம் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கத் தவறாது. தெளிவு எங்கிருந்து வருகிறது?

உற்று நோக்கிச் சிந்திக்க வேண்டும். உலகத்தை உற்று நோக்கிச் சிந்திப்பது ஒன்றுதான் திருக்குறளைத் தெளிவு ஆக்கிக் கொள்வதற்குச் சரியான வழி. வாழ்க்கை நூலாம் திருக்குறளை வாழவேண்டியவர்களெல்லாம் கற்பது அவசியம். நாமும் இன்று தொட்டுக் கற்போம்" என்றார் கண்ணப்பர். அருமையான புதையல் ஒன்று கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான் எல்லப்பன்.