உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

55

எத்தனையோ அல்லல்கள் அவசியங்கள் இருக்கலாம். அதற்காக அலவலகத்தில் எல்லோரும் உறங்குவதும், ஓய்வதுமாக இருந்தால் முடியுமா?"

பரமன் உள்ளத் தூய்மையும், பெருமையும் பெரிய சாமியைப் பிசைந்து எடுத்தன. “பரமா! பரமா!” என்று ஓங்கிக் கூச்சலிட்டு விட்டார் பெரியசாமி.

66

“ஐயா, நீங்களா? இந்த இருட்டு வேளையிலா?” துன்பத்தை ஒரு பக்கத்தே அடக்கி வைத்துவிட்டு பேசினான் பரமன்.

"பரமா! உன் நிலைமையை நன்றாக உணர்ந்தேன். நீ உணரச் செய்துவிட்டாய். மனித இதயத்தோடு நெருங்குவதை அறவே விட்டுவிட்டேன். அது என்னை வாட்டித் தின்கின்றது. என்னை மன்னித்துவிடு. நடந்தவற்றை மனத்தில் போட்டுக் கொள்ளாதே! நாளை வேலைக்கு வந்துவிடு” என்று விரைந்து போய்விட்டார் பெரியசாமி. அவரால் அங்கு நிற்க முடிய வில்லை! பரமனுக்கு தன்னுணர்ச்சி வர நெடு நேரமாயிற்று. “என்ன இருந்தாலும் பெரியவர் பெரியவர்தான்” என்று அவன் வாய் வாழ்த்தியது.

ஆண்டுகள் இரண்டு உருண்டன. வடிவேல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். அவன் இளங்கலை வகுப்பிலே முதல்தரமாகத் தேர்ச்சியடைந்திருந்தான். அவன் நண்பர்கள் பாராட்டு விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து விழாவுக்குத் தலைவர் பதிவு அதிகாரி பெரியசாமிதான்!

அவர் கூறினார்: "வடிவேலைப் பாராட்டுகின்றோம்; வீட்டின் நிலைமை தெரிந்து, கண்ணும் கருத்துமாகக் கற்றுச் சிறந்த முறையிலே வெற்றியடைந்திருப்பதற்காக! ஆனால் இதற்கும் மேலாகப் பாராட்டப்படவேண்டியவர் எவர் தெரியுமா? இதோ...இவரே..” என்று பரமனைச் சுட்டிக்காட்டினார். தாம் ஏற்பாடு செய்துகொண்டு வந்திருந்த மாலையை மகிழ்ச்சி ஆரவாரத்திடையே பரமனுக்கு சூட்டினார்.

“நான் படித்தவன்; பட்டப் படிப்பும் பெற்றவன்; ஓரளவு வருவாய் உடைய பதவியும் உடையவன்; என் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் எனக்கு எத்தகைய சிக்கலும் இல்லை. ஆனால் இப்பரமனோ ஏழைச் சேவகர். எழுதப்படிக்க அறியாதவர். வாய்ப்பு வசதி எதுவும் அற்றவர்; இருந்தும் என் பிள்ளைகளுக்கு நான் செய்துவைக்க முடியாத காரியங்களையும் தம் மகனுக்குச் செய்துள்ளார். தம் வாயைக் கட்டி வயிற்றைக்

·