உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

கட்டித் தம் மகனை அறிவுடையோர் இடையே பெரியவனாக்கி விட்டார். வடிவேலைப் படிக்க வைப்பதற்காக இவர் பட்டிருக்கும் பாடுகளை இவ்வளவு அவ்வளவென்று கூற முடியாது. இவர் குறுகிய அறிவுடையவராக இருந்திருந்தால் படித்தது போதும் கூலி வேலை பார் என்று கூறியிருப்பார். கோழையுள்ளம் படைத்தவராக இருந்திருந்தால் தற்கொலை கூடச் செய்துகொண்டிருப்பார். பரமனோ ஓர் உயரிய தந்தை - பண்புள்ள தந்தை செய்விக்க வேண்டிய கடமைகளிலே ஒரு சிறிதும் தவறாமல் செய்துள்ளார்.

66

-

‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்”

என்பது பொய்யாமொழி என்றால், அதற்கு மெய்யான ஒரு சான்று இப்பரமன்தான். அதனால் வடிவேலைப் பாராட்டும் இவ்விழாவிலே தந்தையின் கடமையைத் தவறாது செய்து முடித்துள்ள பரமனைப் பாராட்டுவது நம் கடமையாகின்றது' என்று தம் பாராட்டுரையை முடித்தார் பெரியசாமி. கூட்டத் தினரின் கையொலி அடங்க நெடுநேரமாயிற்று. பரமன் தன்னை மறந்து அனைவருக்கும் கைகூப்பிக் கொண்டு நின்றார்.