உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

கொண்டாள். அவள் அதற்கு முன் பட்டிருந்த அல்லல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் இருந்த இடம் தெரியாமல் அகன்று போவதாயிற்று. அன்று குமரவேல் சாதாரணக் குமரவேலாகத் தெரியவில்லை தாய்க்கு தெய்வக் கலைஞனாக

எண்ணி உவகை கொண்டாள்.

குமரவேல் மன்னன் கட்டளையை மறந்தான் அல்லன். தன் தாயை அழைத்துக் கொண்டு மாட மதுரைக்கு வந்தான். மன்னன் ஆயிரக்கால் மண்டபத்திலே தான் நின்று கொண்டிருந்தான். பலப்பல இடங்களில் சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். கலை மண்டபத்தைக் கண்டு கண்டு புன்னகை தவழும் முகத்துடன் அரசன் அங்கும் இங்கும் உலவிக்கொண்டும், ஏவிக்கொண்டும்,

ஏவல் செய்துகொண்டும் இருந்தான். குமரவேல் தலை தாழ்ந்து அரசனை வணங்கினான். கீழே மண்டியிட்டு வணங்க முனைந்த அவனை அரசன் அன்புக் கைகள் தடுத்து நிறுத்திவிட்டன. இளைஞன் குமரவேலுக்கு தந்த சிறப்பா? கலைக்குத் தந்த மதிப்பு?

L

“என் அன்னையை அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றான் குமரவேல். உடனே அழைத்துக்கொண்டு வருமாறு ஏவினான் மன்னன்.

66

குமரவேலைத் தொடர்ந்து நடந்தாள் அவன் தாய். திருமலை மன்னன் எதிரே சென்று கையெடுத்து வணங்கி சிற்பியைப் பெற்றெடுத்த செல்வமே! நீ வாழ்க!” என்று வாழ்த்தினான். மன்னவன் நிலைமைகண்டு சிற்பிகள் அனைவரும் கையெடுத்து வணங்கினர். அவள் நாணத்தால் நடுங்கினாள். தலை தாழ்ந்து வணங்கினாள். அடியற்ற மரம்போல நிலத்திடை வீழ்ந்தாள் உவகைக் கண்ணீர் பெருகி நனைக்கலாயிற்று. அரசன் “தாயே எழுந்திரு; எழுந்திரு" என்று பன்முறை கூறி அவளை எழச்செய்தான். அவளுக்குக் கண்ணீர் நின்றபாடில்லை. கூந்தலையும் முகத்தையும் சரிபடுத்திக்கொண்டு நின்றாள். அவளை உற்றுக் கவனித்தான் சிற்பி சேந்தன். அவன் உட நடுங்கியது; உள்ளம் துடித்தது; மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன; துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. மன்னன் முன்னிலை என்றும் பாராமல் “கோதை! கோதை!’ என்று கூச்சலிட்டான். குமரவேலின் தாய் கூச்சலிட்ட சேந்தனை உற்று நோக்கினாள். “ஆ! நீங்களா? என்ன... கனவா?...நனவா? குமரவேல் இவர்தான் உன் அப்பா!” என்றாள் குமரவேலின் தாய் கோதை.

உடல்