திருக்குறள் கதைகள்
அப்பாவா!... இவரா?...
தனைத் தழுவிக்கொண்டான்.
61
என்று குமரவேல் சேந்
-
"கலைப்பித்தும் வறுமைத் துன்பமும் வாழ்க்கை வெறுப்பும் என்னை ஊரைவிட்டுத் துரத்தியடித்தன. கல்லைச் செதுக்கும் கலையாளனான என் உள்ளம் கல்லே ஆயது. கருக்கொண்டிருந்த மனைவி கோதையைத் துறந்து வெளியேறும் அளவுக்கும் சேந்தன் இறந்து போனான் என்னும் செய்தியை நானே பரப்பும் அளவுக்கும் கல்லாகிவிட்டது. ஆனால் குமரவேல் கலைமாண்பு என்னை கூட்டி வைத்து, உயிருடையவனும் ஆக்கியது” என்றான் சேந்தன்.
அவன் உரையைக் கூட்டத்தினர் வியப்புடன் கேட்டனர். பிரிந்த குடும்பம் ஒன்று பட்டது கண்டு மன்னன் உவந்தான். குமரவேல் சேந்தன் முகத்தை உற்றுநோக்கிய வண்ணம் காலடியிலே வீழ்ந்து “என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா” என்றான். மார்புறத் தழுவிக்கொண்டான் சேந்தன் தன் மகனை! கோதை குமரவேலை நினைத்து நினைத்துப் பெருமிதம் கொண்டாள். கணவனைப் பிரிந்து வறுமையின்
டையே தனித்து வாழ்ந்தபோது குமரவேலைப் பெற்றெடுத்தது ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவள் பட்ட அல்லல்களோ கணக்கில் அடங்கா! இப்பொழுது அவையனைத்தும் து துகள் துகளாகப் போய்த் தொலைந்தன. பேரறிவாளர்கள் தன் மகனைச் சான்றோன் என்று பாராட்டியுரைக்கும் பேறு பெற்று விட்டாள் இல்லையா?
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்