திருக்குறள் கதைகள்
65
சட்டியில் இருந்த சோற்றைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லை. பாழ் மண்டபத்தின் ஒரு மூலையிலே முடங்கிப் படுத்தான் குழந்தை. ஒரு பக்கத்தில் நல்லையா படுத்தார். பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு புகுந்தது போல் துன்புற்றார்.
நல்லையா நடு வயதுவரை ஒளியுடைய கண்களுடன்தான் இருந்தார். அம்மை நோய் கண்டு வாட்டியெடுத்து கண்களின் ஒளியையும் வாங்கிக்கொண்டு விட்டது. உழைத்துச் சம்பாதிக்கும் வயதிலே ஒளி இழந்துவிட்டால் என்ன செய்வது?
பழைய சொத்து நல்லையாவுக்கு அதிகமாக இருக்கவில்லை. ஒரு வீடும், நன்செய் புன்செய்களாக இரண்டு ஏக்கர் நிலமும் இருந்தன. அவருக்கு மனைவியாக வந்த காளியம்மாள் பெருங் கைகாரி. வரவு, குடும்ப நிலைமை இவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் செலவழிக்கக் கூடியவள். அவள் பிறவிக் குணமே அதுவாக இருந்தது. பின்னும் என்ன? நல்லையாவின் நிலங்கள் விறக்கப்பட்டு விட்டன. கண்ணொளியும் இழந்தார். பாழும் வறுமைக்கும் ஆட்பட்ட குடும்பத்திலே குருட்டுக் கணவனோடு கூடி வாழ்வதற்கு காளியம்மாள் மனம் இடந்தரவில்லை போல் இருக்கிறது; வெளியேறி விட்டாள். அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு வயது ஐந்தேதான். அவள் தன் மகன், குழந்தையைத் தன்னோடு கொண்டுபோகத்தான் முயன்றாள். ஆனால், பிச்சை எடுத்தாவது குழந்தையை நான் காப்பாற்றுவேனே ஒழிய உன்னிடம் கொடுக்கமாட்டேன் இருந்துவிட்டார்.
6
என்று விடாப்பிடியாக
(
வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் சாப்பிட முடியும்? கடன் தொல்லை அதிகமாயிற்று. வீட்டையும் விரைவில் விற்றார். இன்னும் கடன் கிடைக்குமா? ‘கடனைத் தீர்க்க வழியிருக்கிறதா?” என்று எண்ணிப் பாராமல் எவராவது கடன் கொடுப்பாரா? ன் நல்லையாவுக்குப் பிச்சையெடுப்பது அன்றி வேறு வழியின்றிப் போய் விட்டது.
நல்லையாவுக்குத் தெரியாமலே வந்து காளியம்மாள் குழந்தையைப் பலமுறை பார்க்க விரும்பினாள். தன்னோடு அழைத்துப் போகவும் முயன்றாள். “வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட கணவனையே வெறுத்து வெளியேறிய ஈவு இரக்க மற்றவளுக்கு மகன் ஒரு கேடா? கணவன் ஆகாதபோது அவன் மகன் மட்டும் ஆகுமோ? மானம் இருந்தால் நாங்கள் செத்தாலும்