உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 8

விடப் படப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது. குழந்தையின் நண்பன் ஒருவன் தெரிந்து கூறினான். எவரும் அறியாமல் அதனை வாடகைக்குப் பேசுவதற்குச் சென்ற இடத்திலே, விலை பேசியே முடித்துவிட்டான். எல்லாம், மூவாயிரம் ரூபாய்தான். முடித்த பின்பு அதனை வாடகைக்கு விட்டால் கூட ஐயாயிரம் ரூபாய் முன்பணம் தர ஆட்கள் காத்திருந்தனர். அந்த இடத்தின் மதிப்பிற்கு வேறென்ன வேண்டும்.

குறிப்பிட்ட நாள் ஒன்றில் மிட்டாய்க் கடை தொடங்க இருந்தது. 'படிக்கராமர் மிட்டாய்க் கடை” என்னும் பெரியதோர் பலகையைக் கடை முன் தொங்க விட்டான். தொடக்க விழா இதழும் அச்சடித்தான். கோலாகலமாக விழாத் தொடக்கமாக இருந்தது.

ஒரு வெள்ளித்தட்டு நிறைய இலை, பாக்கு, தேங்காய், பழம், சந்தனம் இவற்றுடன் குழந்தை ஒரு வண்டியிலே புறப்பட்டான். “நிறுத்து” என்று சொல்லிவிட்டுத் தட்டுடன் கீழே இறங்கி ஒரு வீட்டின் முன்கட்டினை அடைந்து நின்றான். அங்கே ஒரு பெரியவர் இருந்தார். அவரைப் பணிவோடு வணங்கி வெள்ளித் தட்டை நீட்டினான். “இது என்ன? இவன் யார்?" என்னும் திகைப்புடன் வீட்டுக்காரப் பெரியவர் மெய்மறந்து போய் நின்றார். எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டார். “இல்லை ஐயா, எல்லாம் தங்களுக்குத்தான்” என்று அவர் அருகில் இருந்த பலகையிலே தட்டினை வைத்தான். “என்னை யார் என்று தெரிகின்றதா ஐயா; நீங்கள் மறந்திருப்பீர்கள்; இரயில் நிலையத்தில் ஒருநாள் தங்கள் சுமையைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு ரூபா 6 வாங்கிக்கொண்டு போகவில்லையா? அவன்தான் நான்; என் பெயர் குழந்தைவேல். தாங்கள் தந்த ரூபா ஒன்றை முதலாகக் கொண்டு இந்நிலைமைக்கு வந்தேன்” என்று வரலாறு அனைத்தையும் கூறினான். அழைப்பிதழை எடுத்து நீட்டினான். என்னப் என்னப்பா இது! என் பெயரையா கடைக்கு வைத்தாய்?” என்று கேட்டார் பெரியவர்.

66

இதனைப் பார்க்கிலும் நல்ல பெயருக்கு எங்கே போவது? இன்று நான் ஒரு மனிதனாகத் தெரிகின்றேன் என்றால் தாங்கள் காலத்தினால் செய்த உதவியால்தான், அந்த நன்றியை மறக்கலாமா? நன்றி மறந்தவன் நாயினும் கடையன் அல்லனோ?’ - குழந்தை நாக்கு தழுதழுத்தது; பெரியவர் உள்ளம் படபடத்தது. தோவோர் புதிய உலகுக்குப் போய்க்கொண்டு இருப்பது