உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

71

போன்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. “இத்தகையவர்களும் உலகில் இருக்கிறார்களா?” என்று நினைக்கும்போது அவர் கண்களில் மகிழ்ச்சி நீர் சுரந்தது.

66

ஐயா, உங்கள் தோற் பையிலே இருந்த பெயரை அன்று பார்த்தேன். அதனை என் உள்ளத்தில் அழியா எழுத்தில் எழுதிக் கொண்டேன். என்னை வாழவைத்த அந்தப் பெயரே வாணிக நிலையத்திற்கு ஏற்றது என்று கொண்டேன்” என்றான்.

படிக்கராமர் குழந்தைவேலைத் தம் குழந்தையாகவே தழுவிக்கொண்டார். தன் அன்பெல்லாம் கூட்டிச் சேர்த்து வாழ்த்தினார். தேநீர் கொண்டு வந்தான் சிறுவன் ஒருவன். இருவரும் பருகினர். சிறுவன், குழந்தைவேல் முகத்தை உற்றுக் கவனித்தான். ஒரே தாவாகத் தாவி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தழுவினான். “அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றி லிருந்து தூக்கியவர்” என்றான். 'உயிர் காத்த உபகாரியா?” என்றது படிக்கராமர் வாய். அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கையெடுத்து வணங்கி விடை தந்தனுப்பினார். அவன் வண்டி நகர்ந்தது - இமை கொட்டாமல் அது மறையும்வரை பார்த்துக் கொண்டு நின்றார். இவனைப் பெற்றவனே பெற்றவன்; மற்றவர்களெல்லாம் பெற்றவர்களா?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். “குழந்தைவேல்- குழந்தைவேல் என்னும் சொற்களை மந்திர மொழிபோல் சொல்லிச் சொல்லி இன்புற்றார்.

மிட்டாய்க் கடை நன்றாக நடந்தது; பெருத்த வருவாயும் வந்தது. “இனிமேல் கவலையில்லை” என்னும் நிலை ஏற்பட்டது. ஆனால் குழந்தைக்கு ஒரே ஒரு கவலை மட்டும் பெருக இருந்தது. குருடரான தன் தந்தை தம் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்குரிய வழி வகைகள் எவையுமின்றி மூலைக்குள் கிடக்கிறாரே என்னும் கவலைதான் அது. அவருக்குக் கண் ணொளி தந்துவிட வேண்டும் என்பதே அவனது ஆசை. அதற்காக இயற்கையை வென்றுவிட முடியுமா? முடியா விட்டாலும் மாற்றுத் திட்டங்கள் உண்டல்லவா! புறக் கண்களுக்குப் பதில் அகக் கண்களை ஒளியிடச் செய்து விடுவது எளிது இ இன்பமானது எனத் தெளிந்தான். குருடர் களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர் ஒருவரை அழைத்துக் கொண்டுவந்து, நல்லையாவிற்கு எண்ணும் எழுத்தும் கற்க ஏற்பாடு செய்தான்.