72
இளங்குமரனார் தமிழ்வளம் – 8
முயற்சி வீணாகி விடவில்லை. குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆவலுடைய நலலையாவுக்குக் கல்வி “கனிச்சாறு" ஆயிற்று. தமிழ் 'தேன்' ஆயிற்று! முயன்று விருப்புடன் கற்றார். முதுமையிலும் தளராது மனனம் பண்ணினார் இரண்டோர் ஆண்டுகளிலே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் கற்றுத் தெளியும் அளவுக்கு உயர்ந்தார்.,
இப்பொழுதெல்லாம் அவருக்குப் பொழுதுகள் இன்பப் பொழுதுகள் ஆகிவிட்டன. திருவள்ளுவர் இளங்கோ, சாத்தனார், கம்பர் இவர்களோடு பழகுவது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? நல்லையாவுக்குக் கிடைத்தது. தாம் பெற்ற இன்பம் பிறரும் அடையுமாறு நாடினார். குழந்தை முன்னின்று வழி செய்தான்.
66
"நல்லையா குருடர் பள்ளிக்கூடம்” என்னும் பெயரால் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பமாயிற்று. கண்ணொளியற்றவர் களுக்குக் கல்விக் கண்கள் தரும் மருத்துவராக நல்லையா பணியாற்றினார். அவர்தானே கண்கெட்டவர்களின் நிலையை உள்ளவாறு அறிவார்!
மன
குருடர் பள்ளியை ஒட்டி இருபது ஏக்கர் நிலம் இருந்தது குழந்தைக்கு. அங்கு ஒரு ‘கூட்டுப்பண்ணை' நடைபெற்று வந்தது. அப்பண்ணை முகப்பிலே ஒரு பலகை தொங்கியது. அதில் இருந்த செய்தி:-
அறிவிப்பு
மானமுள்ள பிச்சைக்காரர்களுக்கு
பிச்சை எடுத்து உயிர் வாழ்வது மானக்கேடு என்று எண்ணும் பிச்சைக்காரர்கள் இந்தப் பண்ணையின் உதவியை நாடி வரலாம். அவரவர் விருப்பம். உடல்நிலை இவற்றுக்கு ஏற்ப உழைப்பு இங்கு தரப்படும். உணவு உடைகள் வழங்குவதுடன் உழைப்பைப் பாறுத்து ஊதியமும் பெறுவர். கைத்தொழில்கள் செய்யும் பழக்கமும் விருப்பமும் உடையவர்களையும் உரிய முறையில் கவனித்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பண்ணை அலுவலகத்தை அணுகிக் கேட்கவும்.
பரம்பரைச் செல்வர்கள் வந்த வந்து மூக்கிலே விரலை வைத்துக்கொண்டு பலகையைப் பார்த்தனர். உள்ளே என்ன