உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

"சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி"

75

என்னும் நன்னெறியை முதற்கண் நினைவில் நிறுத்திக் கொண்டு நம் அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும். முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக் கோல்போல் அமைந்து ஒருபக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் என்று எவ்வளவு அழகாகக் கூறுகின்றது இப்பாட்டு! இதன்படியே எந்தவொரு காரியத்தை எந்தவொரு நாடு செய்தாலும் நல்லதாயின் நல்லது என்றும் அல்லது ஆயின் அல்லது என்றும் உறுதியாகச் சொல்வோம். வேண்டியவர் வேண்டாதவர் என்று நடுவுநிலை தவறிப் பேசோம்” என்று தொடர்ந்து பேசினார்.

ஒலிக்கருவிகள் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தன. இல்லாவிடில் எவ்வளவோ தொலைதூரம் வந்துவிட்ட நாங்கள் இவ்வினிய குரலைத் தெளிவாகக் கேட்டிருக்க இயலாது.

நாங்கள் ஆபிரிக்கா மீது பறக்கிறோம். பார்க்கப் பார்க்க என்னவோ போல் இருந்தது. எங்கள் எல்லோருக்கும் எரிச்சல் தாங்க முடியவில்லை - மன எரிச்சல்தான்!

வெள்யைர்கள் ஒரு பக்கம்; கறுப்பர்கள் ஒரு பக்கம் வெள்ளையர்கள். தெரு ஒரு பக்கம். கறுப்பர்கள் தெரு ஒரு பக்கம். வெள்ளையர்கள் பள்ளி ஒரு பக்கம்; கறுப்பர்கள் பள்ளி ஒரு பக்கம். இப்படி இப்படியே உணவு விடுதி, நீச்சல் குளம், பூங்கா, பொழுது போக்கு அரங்கம் விளையாட்டிடம் எல்லாம் எல்லாம்! சே! சே! இதென்னடா கொடுமை! ஊருக்குளே திரியும் நாய்களிலே வெள்ளைநாய் கறுப்பு நாய் என்று இல்லை. எல்லா நாய்களையும் வீட்டிலே வைத்து பாலும் ரொட்டியும் போட்டு, 'மெத்தையிலே உறங்கப் பண்ணிக் கொஞ்சி குலாவி மகிழும் இந்த வெள்ளையர்கள், கறுப்பர்களை மட்டும் இப்படி வறுக்கிறார்களே, இது கொடுமை இல்லையா? இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா இந்த அநியாயம்? என்று ஏங்கினோம். இதற்குள் எங்கோ பறந்துவிட்டது தட்டு. ஆனால் ஒரு மூலையிலேயிருந்து கிளம்பிய ஒரு சிறு குரலைக்கூட இழுத்துவிட்டது ஒலி வாங்கி.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்