உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

8

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

என்னும் குறளை ஓங்கிய குரலிலே அழுத்தி அழுத்திப் பன்முறை கூறினார் ஒரு சொற்பொழிவாளர். "ஓங்கட்டும் உம் குரல்; இப்பாலைவனக் காட்சிகளிலே உம் குரலாவது பசுஞ்சோலையாக இருக்கட்டும், இன்னும் ஓங்கிக் கூறும்” என்று பறக்கும் தட்டில் இருந்தவாறே கத்தினோம். எங்கள் வாழ்த்தையும் உரைத்தோம். எங்கள் அவசரத்திலும் ஆத்திரத்திலும் இறங்கிப்போய்க் கைகுலுக்கிக் கொண்டு அன்பைத் தெரிவிக்கவா முடியும்?

“இங்கிலாந்து இங்கிலாந்து” என்று கத்தினார் நண்பர் ஒருவர். ஆம்; நாலைந்து நூற்றாண்டுகள் நம்மை அடக்கி ஆட்சி செய்துவந்த நாடு அல்லவா! நரியாக இருந்துகொண்டு, சிங்கம், புலி, யானைகளையும் மண்டியிட வைத்து அடக்கி ஒடுக்கி 'விலங்கு விளையாட்டு' (சர்க்கசு) நடத்திவந்த நாடு அல்லவா! அதனை நேரில் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழாது இருக்க முடியுமா? வியப்படையாமல் இருக்க முடியுமா?

66

"இங்குதானே இருபத்து மூன்று ஆண்டுகள் தமிழ்ப் பணி செய்தார் ‘தமிழ்ப் போப்.' 'தாழ்மையுள்ள தமிழ் மாணவன்' என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் செய்தவர் அவர் அல்லவா! இந்த நாட்டில் பறக்கும்போது அத் தமிழ் அன்பரை நினைக்காது இருக்க முடியுமா?" என்றேன். என் நண்பர் ஒருவர் சொன்னார்; அதோ போப் பரப்பி வைத்த தமிழ் முழக்கம் கேளுங்கள்

66

ஆற்று மணல்போல் மேலே இருந்து பார்க்கத் தெரிந்தது

கூட்டம்.

‘கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து’

என்று கூறி விளக்கம் பேசினார் சொற்பொழிவாளர். பொறுத் திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது அதன் குத்துப்போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் எந்தக் காரியத்யுைம் சாதிக்க முடியாது. உலகம் விழித்துக் கொண்டது. இன்னும் பழைய முறையில் நாம் வாழ முடியாது. புதிய புதிய முறைகள்; புதிய புதிய முயற்சிகள்; புதிய புதிய கண்டுபிடிப்புகள் ப்படி இப்படி...! இன்று வாய்ப்பு இல்லையென்ாறல் பாறுமையாக இருப்போம். இப் பொறுமை தோல்விப் பொறுமையன்று. வெற்றிப் பொறுமை. நாளைச் செம்மாந்து