திருக்குறள் கதைகள்
77
கிளம்புவோம். பழைய வாடையும் புதிய வாடையும் கலந் பு ய தடித்தன.
இது என்ன? ஒரே பண்ணைமயமாக இருக்கிறது? எங் கெங்கு நோக்கினும் ஆலைகள் பெரும் பெரும் வயல் வெளிகள்! வியப்புடன் பார்த்தோம். இதற்கு முன்னமும் பறந்திருந்த ஒருவர் இதுதான் உருசியா' என்றார். இதோ மாசுகோ வந்து விட்டது என்றார். உற்றுப் பார்த்தோம். உருசியா கூட்டமைப்பின் பாராளுமன்றம் கூடியிருந்த நாள் அது. உணவைப் பெருக்குவது எப்படி? உழைப்பின் தரத்தைப் பெருக்குவதுடன் ஓய்வு, பொழுதுபோக்கு இவற்றின் அளவை அதிகரிப்பது எப்படி? என்பது பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.
ஒரு சொற்பொழிவாளர் பேசினார்: உலகத்திலுள்ள அனைவரும் தத்தம் உழைப்பால் உறுதியாக வாழ முடியும். பிறரைச் சுரண்டியோ பிச்சையெடுத்தோ வாழ வேண்டும் என்ற நிலைமை இல்லவே இல்லை. அப்படியிருந்தால் அரசாங்கமே காரணம். அத்தகைய அரசு இருந்தால் என்ன. அல்லது அழிந்தால் தான் என்ன? இக்கருத்தை.
66
66
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்'
டு
என்னும் குறள்மணி கூறுவது காண்க என்றார். நாங்கள் அனைவரும் “அழகு! அழகு!!" என்று கத்தினோம். கத்திக் கொண்டு கீழே பார்த்தோம்; அதுகடலாக இருந்தது. கருங் கடலாம் அது. கொஞ்ச நேரந்தான் சென்றது. “மதுரை வந்துவிட்டது; இறங்குங்கள்! இறங்குங்கள்!!" என்றார்கள். 'முடியாது; முடியவே முடியாது என் வீட்டு மாடியில் போய் இறக்கிவிடுங்கள்; இங்கு இறங்கமாட்டேன்" என்று கூச்ச லிட்டேன். பறக்கும் தட்டில் சென்றவன் மோட்டாரில் எறியோ, காலால் நடந்தோ போகலாமா? “விரைவாக இறங்குங்கள்; விளையாட்டைப் பின்னால் வைத்துக்கொள்வோம். அவசரம்” என்று கடுகடுப்போடு சொன்னார் ஒருவர். இது என்ன தொல்லை? அழைக்கும்போது இருந்த பெருமை, அனுப் பும்போது இல்லையே” என்னும் ஏக்கத்திற்கு ஆட்பட்டேன். தூக்கம் கலைந்தது. உறங்கிக் கொண்டிருந்த நான் விழிகளைத் திறந்தேன். பறக்கும் தட்டில் போனது கனவென்று அறிந்தேன்.
66
பறக்கும் தட்டில் போனது கனவானாலும் ஆகட்டும்; நனவானாலும் ஆகட்டும். கவலையில்லை! அனால் அமெரிக்கா,