உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

கொண்டனர் காவலர். (போலீசார்). ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வரிசையாக நின்றனர். விடிந்த பின் மாயாண்டியை மாடிக்குச் சென்று பிடித்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். இருட்டிலே நுழைந்தால் அந்த ‘வேதாளம்' என்ன செய்யுமோ என்ற அச்சம் இருக்காதா?

மாயாண்டி இருட்டாக இருக்கும்போதே எழுந்து விட்டான். கீழே பார்த்தான். 'சிவப்புத் தொப்பி'களாகத் தெரிந்தன. "சரி! இப்படியா வேலை நடக்கிறது; நடக்கட்டும் என்று நினைத்து மெத்தை தலையணை இவற்றைப் பெருங் கட்டாகக் கட்டினான். வீட்டை அடுத்திருந்த சோளக் கொல்லையுள் வீசி எறிந்தான். மெத்தை ‘தொப்' என்று விழுந்ததுதான். “மாயாண்டி தப்பிவிட்டான், மாயாண்டி தப்பிவிட்டான்; என்று கூச்சலிட்டுக் கொண்டு சோளக் கொல்லைக்குள் ஓடினர். மாயாண்டி தலைவாயில் வழியே சிங்கம் போல நடந்து போய் விட்டான். இப்படி எத்தனையோ, நிகழ்ச்சிகள். அவனைப் பிடிப்பதற்கும் எத்தனையோ முயற்சிகள்.

"மேலைக்கால், முனியாண்டி வீட்டிலே சில பேர்கள் கூடிச் சேர்ந்து ‘மாயாண்டியைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும். அவனைப் பிடித்தால் ஒழிய நாம் அமைதியாக வாழமுடியாது' - இப்படிப் பேசிக் இப்படிப் பேசிக் கொண்டார்கள். நான் என் காதுகளினாலேயே கேட்டேன்” என்று மாயாண்டியிடம் திருடன் மகாலிங்கம் கூறினான். ஒரு வெடிச் சிரிப்புச் சிரித்தான் மாயாண்டி. "சரி சரி! நம் குணம் தெரியாதவன்; தேடிப்போய் ஒருவனைப் பழி வாங்குவது இல்லை. நம்மை வழிய ழுத்தவனை வாட்டாமல் விடுவதும் இல்லை. ல்லை."என்றான். அவ்வளவுதான்.

இரவு பன்னிரண்டு மணிக்கு முனியாண்டியை அவன் படுத்திருந்த கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து விட்டனர். கால், கை, இடுப்பு தலை இவற்றையெல்லாம் கட்டிலோடு வரிந்து கட்டியிருந்தனர். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வ தெல்லாம் மாயாண்டியின் கூட்டத்தார்க்கு இன்ப விளையாட்டு. பாவம்! முனியாண்டி மாட்டிக் கொண்டான்.

முனியாண்டி அப்பாவி! மாயாண்டியைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் எது பற்றியும் கவலைப்படாதவன். ஆனால், அவன் வீட்டி லிருந்து சில பேர்கள் மாயாண்டி பற்றிப் பேசியது உண்மைதான்.