திருக்குறள் கதைகள்
81
அதன் விளைவு இப்படியாகும் என்று சிறிதும் நினைக்க வில்லை. நினைத்திருந்தால் பேசவிட்டிருக்க மாட்டான். இனி என்ன செய்வது? உரலுக்குள் தலை போய்விட்டது. உலக்கைக்குத் தப்ப முடியுமா?
66
முனியாண்டி! டி! முனியாண்டி!! என்னைக் காட்டிக் கொடுப்பாய் அல்லவா! கக்கக்கா... கக்கக்கா... ஆம்! காட்டிக் கொடுத்து விடுவாய். வீரன் அல்லவா!" முனியாண்டியின் முதுகிலே தட்டிக் கொண்டு மாயாண்டி சொன்னான். அந்தச் சிரிப்பிலே அயர்ந்து போனான் முனியாண்டி. அவனுக்கு வழக்கமாக வரும் நோயொன்று உண்டு. அது, காக்கை வலிப்பு. சிறிது பயந்து விட்டால் போதும். வந்து விடும். இப்பொழுது ஏற்பட்டது சிறிது பயமா? பேய், பூதம், பிசாசு, குட்டிச் சாத்தான் எல்லாம் சேர்ந்து அடித்த பயம்! வெட்டு வெட்டென்று அரை மணி நேரம் வெட்டியது. வாய் நுரை தள்ளியது. லெல்லாம் இரத்தம் கசிந்தது, நேரம் செல்லச் செல்ல வலி விட்டது.
'காட்டிக்கொடுப்பேன்' என்பவனுக்குக் கருணை காட்டுவது மாயாண்டியோ அவன் கூட்டமோ அறியாத ஒன்று. 'காலை ஏழு மணிக்குக் கண்களை வாங்கிவிட வேண்டும் ஒரே முடிவுடன் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்றனர். முனியாண்டி கட்டிவைக்கப்பட்டான். நாலைந்து தடவைக ளாவது காக்கை வலி வந்திருக்கும். அஞ்சி நடுங்குவான்; அதனை அடுத்து வலிப்பு வரும். வலிப்பு இருக்கும் போது தான் அவனும் அஞ்சாமல் இருந்தான்.
மாயாண்டிக்கு முனியாண்டியை நினைக்க என்னவோ போல் இருந்தது. அவனுக்குள்ள காக்கை வலிப்பை நினைத்து வருந்தினான். அதே பொழுதில் “காட்டிக் கொடுப்பேன்” என்று அவன் வீட்டில் பேசியதை எண்ணிப் பொறுமினான். கண்ணைத் தோண்டியெடுக்கும் தண்டனையையும் நினைத்தான். அவனால் உறங்க முடியவில்லை. “பையா! வெற்றிலை" என்றான். வெற்றிலையை மாறிமாறி மென்று கொண்டும், உதப்பித் துப்பிக் கொண்டும் பொழுதைக் கழித்தான்; வெற்றிலையும் தீர்ந்தது; படுத்தான்; உறக்கம் வரவில்லை; எழுந்தான்; இன்னும் காய்ந்த சருகாவது கிடக்காதா என்று வெற்றிலை பையைத் துருவினான். ஒரே ஒரு பாக்குச் சில் மட்டும் இருந்தது. அதை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டான். பாக்குச் சில் இருந்த தாளில் ஏதோ அச் சடித்திருந்தது. அது ஒரு புத்தகத்தின் தாள். எண்ணெய்ப் பந்தம்