உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

89

அந்த ஒன்றும் பிறர்பிறர் புகழ்ச் செயல்களைப் பரப்பி, அவர் செய்த பழிச் செயல்களை மறைத்து விடுவதே!

மறைந்து ஒன்றைச் செய்தால் என்ன பொருள்?

எவருக்கும் தெரியாமல் இருட்டில் செய்யும் எந்த ஒரு காரியமும் நல்ல காரியமாக இருக்குமா? - நிழற் படம் கழுவுவது போல் ஓரிரண்டு செயல்கள் விதிவிலக்காக ருக்கலாம். மற்றயவை?

இருட்டிலே செய்வது வஞ்சம், சூது, கொலை, கள்ள வணிகம், கயமை இப்படித்தான் இருக்கும்.

மையிருள் சூழ்ந்த மதிமறை நாளில் ஏற்படும் தீய நினைவுகள் காடியவருக்கும், நிறைமதி நிலா வொளி பரப்பும் நாளில் தோன்றுவது இல்லையாமே! இருட்டிலே தோன்றும் கெட்ட நினைவுகள் வெளிச்சத்தில் தோன்றுவது இல்லையாமே! இருட்டில் புரட்டராய் வாழ்வாரும் வெளிச்சத்தின் முன் அற நெஞ்சராய் வாழ்கின்றனரே! ஆக, ஒருவன் வெளிப்படையாய்ப் பேசி, வெளிப்படையாய்ச் செயலாற்றி வருவான் என்றால் அவனது களங்கமற்ற உள்ள நிலைமை தானே வெளியாகின்றது! கள்ளமெல்லாம் உள்ளே வைத்து, உள்ளொன்றும் புற மொன்றுமாக நடித்து வாழுவோன் பெருச்சாளியாகவேனும், மூட்டையாக வேனும், நரியாகவேனும் இருத்தல் வேண்டும்; “வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை” என்பது பழமொழி. மறைந்து வாழ்பவன் எவன்? மறைந்து குடிப்பது எதை?

மறைந்து பேசுவது எதை?

மறைந்து செய்வது எதை?

இவற்றை எண்ணிப் பார்த்தும் புறங்கூறித் திரிபவர்க்குப், "போகாத இடந்தனிலே போக வேண்டாம்;

போக விட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்”

என்று உலகநாதன் எவ்வளவு உரக்க முழக்கினாலும் ஏறுமா? “என்றும் புறஞ்சொல்லலாகாது பாப்பா" என்று பாரதி பன்முறை பரிவுடன் வேண்டினாலும் பயன்படுமா?

பிறருக்கு மறைத்துப் பேசுவதாக ஒருவன் நினைக்கலாம். அவன் எவ்வளவு சிறந்த நடிப்பாளன் என்றாலும் நெடுநாள்