88
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
திருத்த வேண்டும் என்று கருதினால் உன் நண்பனை நேருக்கு நேர் நின்று சொல்லால் தாக்கு! நன்றாகத் தாக்கு! மீண்டும் உன் முகத்தில் விழிக்க முடியாத அளவுக்குக் கூடத் தாக்கு! வள்ளுவர் கூறுவது போல் "இடித்து உரை." தொல் காப்பியர் கூறுவது போல். “வேம்பும் கடுவும்” (நஞ்சு) போலாயினும் உரை. ஆனால் மறைந்து நின்று பழித்து ஒன்றும் கூறாதே! பகைவனுக்கும் இத்தொண்டினைச் செய்தல் வேண்டாம். உன்னைப் பழிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? பழித்தால்— பழிக்குமேல் பழி! இடித்தால் இடிக்குமேல் இடி! எங்குப் போய் நிற்கும்?
நண்பனையாவது முன்னின்று தாக்கலாம்; பகைவனை அதுவும் செய்தல் கூடாது. அவனைக் காணாத இடத்து அவன் சிறப்பியல்களைப் புகழ்ந்துரைக்கத் தொடங்கினால் போதும் அவன் நண்பாளன் ஆகிவிடுவான். நண்பனே ஆயினும் பின்னின்று பழித்தால் பகைவன் ஆகிவிடுவான். நட்பும் பகையும் நாவில்' தான்!
இதனைக் கருதிய ஒருவர் உரைத்தார்; பிறரால் புகழப்பெற விரும்பும் ஒருவன் எந்நாளும் ஒன்றைப் போற்றியாதல் வேண்டும்.
முதல்