இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
91
நின்றுதிட்டினான்; வேறு சாட்சி வேண்டியது இல்லை; இவனைச் சிறைக்குள் தள்ளுங்கள்.”
புறங் கூறத் தொடங்கும் ஒருவனிடம் “சீ! நீ ஒரு மனிதனா?” என்று ஒரு கேள்வி போடட்டும்! பிறகு யாரிடமேனும் புறங்கூற வாய் திறப்பானா?
“கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்”.
முன்னால் நின்று இரக்கம் இல்லாமல் கடுஞ்சொல் சொன்னாலும் ஒருவன் முன் இல்லாதபோது அவனைப் புறங்கூறுதல் கூடாது.