உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மக்கட் பதடி

“அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்?-அன்பில் ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்? இன் உரைகள் தருபவர் ஆர்?-வீட்டை இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?”

எனப்பல வினாக்களை அடுக்கிப்பாடுகின்றார் கவிமணி. வ்வினாக்களுக்குரிய ஒரே விடை ‘தாயர்' என்பதே.

தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர்களெனச் சொல்வோர்களுள் தலையாயவர் தாயரே! தாயர், மக்கள் நலங்கருதித் தாங்கும் துயர்கள் எத்துணை? எத்துணை? “தாயர் எவ்வாறு தமக்கு வரும் துயர்களைத் தாங்குகின்றார்?" என்று வினவுவோமாயின் அவரிடம் இயற்கையாய் அமைந்துள்ள தாய்மையால் தாங்குகின்றார் என்ற விடையே பெறலாம்.

தாயாக மாறிவிட்டேன் என்னும் உவகையால் மகப்பேறு அடையும் துன்பத்திலும் இன்பங் காண்கிறார் தாயர்.

உலகுக்குச் சிறப்பளிக்கும் ஒருவனைத் தந்துவிட்டேன் என்னும் உவகையால், அவனைச் சான்றோன் ஆக்குவதற்குள் அடையும் துன்பங்களையெல்லாம் துகளாக எண்ணி ன்புறுகிறார்.

'இன்னார் போல இருக்கவேண்டும்' என்னும் ஈடிலாச் சிறப்புக்காக எல்லா ன்னல்களையும் புன் முறுவலுடன் ஏற்கின்றார்.

ஈன்ற பொழுதில் அவருக்கு இருந்தது துளி இன்பம். "அம்மா! உன் மகன் நல்லவன், அறிவாளி ஆற்றலாளி; பண்பாளி” என்று பிறர் பாராட்டக் கேட்ட பொழுதிலே அது பெருவெள்ளமாகப் பெருகும். அதுகாறும் பட்ட துயரெல்லாம் அடியோடு ஒழியும். "இவனைப்பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ என்று பாராட்டத்தக்க மக்களைப் பெறுவதொன்றே தன் பிறவிப் பயனென்று வாழும் தாய்க்கு இணை தாயேதான்!