உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

93

இத்தகைய தாயினிடம் சென்று “உன் மகன் மகன..." என்று ஒருவன் இகழ்ந்தால் அவள் மனநிலை எவ்வாறு இருக்கும்? "உன் மகன் மகனல்லன்; மக்களுள் பதர்” என்றால் எப்படித் துடிப்பாள்! இழிவுற நடந்து, பழிபெறும் ஒருவனை மகன் என்று எண்ணாள்; எண்ணி இன்புறாள். சாந்து இருக்கிறது என்று திறந்த செப்பினுள் பாம்பு இருக்கக்கண்டால் ஏற்படும் நிலைமை என்ன? அதே நிலைமைதான், பேரும் புகழும் தருவான் எனக் கருதப்பெற்ற மைந்தன் பாவமும் பழியும் தரும்போது ஏற்படும்.

66

‘பதர்” என்று ஒருவனைப் பழிக்கிறானே; அவனும் பதராக இருக்கலாம் அல்லவா! ஆம்; தீயவன் ஒருவன் ஒருவனை "நல்லவன் என்றால் அவன் முழுத்தீயவனாகவே இருத்தல் வேண்டும். தீயவனுக்கு நல்லதாகத் தோன்றுவது தீயதாகத்தானே இருக்க முடியும். அவனுக்குக்கெட்டவன் என்று தோன்றுபவன் எவன்? கெட்டது என்று தோன்றுவது எது? நல்லவனும், நல்லதுமே! இத்தகைய தீயவன் ஒருவன் ஒருவனைப் 'பதர்' என்று பழித்தான் எனில் கவலை இல்லை; கருத்துடன் எண்ணி மகிழவும் செய்யலாம். ஆனால், வீண் சொற்களோ, வெறுஞ் சொற்களோ சொல்லாத ஒருவர், சொல்லத் தொடங்குமுன் சொல்லின்விளைவு, சொல்முறை, கேட்போர் இயல்பு,சொல்வோன் தகுதி, உலகியல் இவற்றை எண்ணியன்றிச் சொல்லாத ஒருவர் ஒரு தாயினிடம் வந்து உம் மகன் “மக்களுள் பதர்” என்றால் அவ்வுரை பொய்யுரையாமா? அதனைத் தன் காதால் கேட்டதாய் நெஞ்சம் எப்பாடுபடும்? மகனைச் சான்றோன் ஆக்க வேண்டிய தந்தையின் மனநிலைதான் எவ்வாறு இருக்கும்?

“உன் மகன் கோழை, போரில் புறமுதுகு காட்டினான்; புண்பட்டான்" என்று கூறினான் போர்க் களத்தில் நின்று தாக்க ஆற்றாமல் ஓடிவந்த ஒரு புன்மகன். தாயும் வாள் எடுத்துக் காண்டு வன்களம் சென்றாள். போர்புரிதற்காகவா? இல்லை! கோழை மைந்தன் என்னும் குற்றச்சாட்டு உண்மையானால் தன்னைக் களத்திலே பலியூட்டிக்கொள்ளுதற்கு! ஆனால் புலிக்குகைபோன்ற அம்மங்கை நல்லாள் வயிற்றில் பிறந்த அவ்வீரச் சிறுவன் மார்பில் புண்பட்டுக் கிடந்தான். 'மைந்தன் மாண்டான்' என்னும் இன்பத்தால் ஈன்ற பொழுதில் பெரிய உவப்பு அடைந்தாள்! இவ் வன்னை யிடத்துப் பழிப்புரையாடிய பேதையர் போல்வார் பிதற்றுதல் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. மாண்புடையோர் பழிப்புரை ஒன்றே பொருட்டாகக் கருதத் தக்கது.