110
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
வேண்டுமா? இப்புலவருக்கு ஈந்தவனது வள்ளன்மைக்கு வேறு சான்று வேண்டுமா? புலவர் துறையூர் ஓடை கிழார்! வள்ளல் ஆய் அண்டிரன்! புலவர் ஊர் துறையூர்! வள்ளல் ஊர் ஆய்குடி!
"பொருள் கருதிக் கொடுப்பது அன்றிப் புகழ் கருதியும் கொடுத்தல் கூடாது; மேலுலக இன்பங் கிடைக்கும் என்னுங் கருத்தாலும் கொடுத்தல் கூடாது;" என்றெல்லாம் வள்ளல்கள் கருதினர்; ஈகையால் சிறந்தனர். ஆம்! அக்காலம் ஈகை என்னும் இனிய பறவை விண்ணேறிப் பறந்து இன்புற்ற காலம் எனலாம்!
ன்னவர்
கைமாறு கருதியா பெய்கிறது மழை? கைமாறு கருதியா தருகிறது கனிமரம்? இத்தகையரே வள்ளல்கள்; இனியவர் என்று பாராது ஈபவர்கள்!
வறியவர்க்குக் கொடுப்பது பற்றியும் சில திட்டங்கள் இட்டுள்ளனர் ஆன்றோர். அவர்கள், ஒருவர் கேட்குமுன் அவர் குறிப்பு அறிந்து நிலை அறிந்து ஈதல் வேண்டும் என்றனர். அன்றிப் பன்முறை வற்புறுத்திக் கேட்டுக் கொடுப்பது சிறப்பன்று என்று உரைத்தனர். அன்றியும் பன்முறை நடக்க வைத்துக் கொடுப்பது 'நடைக்கூலி' அல்லது 'காற்கூலி' என்றனர். இவர்களுக்கும் உயரிய நிலைமையில் நின்ற உரக்கப் பேசியவர்களும் உளர். அவர்கள் 'யான் எதுவும் இல்லாதவன்' எனவந்த ஒருவன், மற்றொருவரிடத்துச் சென்று மீண்டும் இச்சொல்லைச் சொல்லாத அளவுக்கு மிகுதியாகக் கொடுத்தல் வேண்டும்" என்றனர். இத்தகையோர் கையே, நெடுங்கை என்றும் தருகை என்றும் குறித்துள்ளனர். ஒருவன் கையினும் மற்றொருவன் கைதாழக் கூடாது; உயர்தல் வேண்டும். இத்தகைய உயர் வு ஈகையில்தான் உண்டு என்றனர். "ஈவோர் கை முடங்கக் கண்டது இல்லை” என்பது அவர்கள் முடிவுரை.
ஈகையால் பெயர் சிறந்த நாடு இந்நாடு வள்ளல்களின் புகழ் பாடுதலில் பெருமையுறும் இலக்கியங்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ் மொழி; தமிழ்ப் புலவர் நா! இத்தகைய நாட்டிலே ஈகைச் சிறப்புப் பற்றி அறியக் கிடக்கும் குறிப்புகள் ஏராளமாம். அவற்றின் முடிந்த கருத்துக்கள் என்னவென்றால், "ஈகையும் இசைபட வாழ்தலுமே பிறவிப்பயன்" "அவ் வீகை வறியார்க்கு ஈவதே யாம்! பிறருக்கு ஈவதெல்லாம் மீண்டும் பெறுதல் கருத்துடன் தருவதே யாம்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.
(குறியெதிர்ப்பு-திரும்பப்பெறுதலைக் குறியாக உடைமை)