உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

109

கூறுவோரது ஏக்க உரையிலேயே அவர்கள் எதிர்நோக்குதல் தெளிவாகப் புலனாகும்.

ங்குக் காட்டிய அனைத்தும் செல்வம் உடையவர் செல்வம் உடையவர்க்கு அதிகமாகவோ, குறைவாகவோ, அளவாகவோ உதவும் உதவிகளே அல்லாமல் வாழ்க்கைத் தரத்தின் அடியினும் அடியாய் அமைந்த ஏழ்மையரை எழுப்ப உதவும் உதவி அன்று.

வாய்ப்பு உடைய ஒருவருக்குச் செய்யும் எதுவும் வீண் போகி விடுவது இல்லை. பயன் கருதாது செய்தாலும் கூட, பயன் பெற்றவர் அதனினும் பல மடங்காகச் செய்ய முனைகின்றாரே அன்றி 'வாளா' இருக்க நினைவது இல்லை. அப்படி இருந்தால் தம் தகுதிக்கும், செல்வ நிலைக்கும் இழுக்கு என்றே எண்ணு கின்றார்; இத்தகையவருக்குச் செய்வது எவ்வாறு பயன் கருதாதது ஆகும்?

எவருக்குச் செய்வது பயன் கருதா உதவி? ஓர் ஏழைப் புலவர் சொல்கின்றார்; அவருக்கு இணையான வறியவர் ஒருவரை அவரால் கற்பனை செய்தும் காண முடியவில்லை; அதனால் வள்ளலிடம் உரைக்கின்றார்; "எமக்கு ஈபவர்களே பிறர்க்கு ஈபவர்கள்; எம்மை அன்றிப் பிறருக்கு ஈபவர்கள் தமக்குத் தாமே ஈபவர்கள்" இப்புலவர் வறுமை இப்புலவர் வறுமைக்கு வேறு சான்று

முதிய