உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கட்டுரைகள்

117

'ஆருயிர்கட் கெல்லாம் அன்பு செயல் வேண்டும்" என்பது அன்பின் முதிர் நிலையாம் அருள்வாக்கு. இப்பொழுது அன்புக்கும் அருளுக்கும் உள்ள வேற்றுமை புலனாகும். புலன் ஆனால், அருளாளர் அனைவரும் பழுத்த அன்பர்; அன்பர் அனைவரும் அருள் கல்லூரியின் தொடக்கநிலை மாணவர்; அருளாளர் அனைவரும் அன்பர்களே; ஆனால் அன்பர்கள் அனைவரும் அருளாளர்கள் அல்லர்; அருளாளர் ஆபவர்களும் உளர்; ஆகாதவர்களும் உளர்” என்பன தெளிவாம்.

பெரியார்

-

-

அருளாளருக்குத் துன்பம் இல்லையா? கிரேக்கப் மெய்யுணர்வுப் பேரறிஞர் சாக்ரடீசு போலும் அருளாளர் உலகில் உளரா? அவர் இறக்கு மாறு நஞ்சு தரவில்லையா? ஆட்சிப் பொறுப்பு உடையவர்களும் சமய மன்றில் தலைநின்றவர்களும் என்ன பாடுபடுத்தினர்? ஆகையால் அருளாளருக்குத் துன்பமில்லை என்பது எப்படி உண்மையாம்? எனலாம்! ஆம் கேட்க வேண்டிய கேள்விகள் தாம்.

-

“கருத்தினை மாற்றிக்கொண்டால் சரி; இல்லையேல் கொடுநஞ்சு கொடுக்கப்படும்" என்று நீதிமன்றம் கூறியபோது சாக்ரடீசு அஞ்சினாரா? இன்ன நாள் உமக்கு நஞ்சு தருவோம் என்று திங்கட் கணக்குக்குமுன் முடிவு செய்து அச்சுறுத்தியும் அதனைப் பொருட்டாக எண்ணினாரா? நஞ்சைக் குவளையில் காண்டுவந்து தந்த பொழுதும், குடித்தபொழுதும் சிறு அளவிலேனும் சோர்ந்தாரா? இல்லையே! அருளாளராகிய அவரை அச்சுறுத்தினர்; ஆனால் அவர் அஞ்சினார் அல்லர்; நஞ்சைப் பருகிய பொழுதும் நஞ்சு உடலில் இப்படி இப்படி வேலை செய்கிறது என்று உடன் இருந்த மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்! அஞ்சியவர் இது செய்வாரா? சாச்ரடீசை அச்சுறுத்தித் தலைகால் தெரியாமல் ஆடியவர்களே இவரது அஞ்சாமை கண்டு தோல்விப் படுகுழியில் வீழ்ந்து விடவில்லையா?

துன்பத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே எல்லா உயிர்களும் விரும்புகின்றன. தங்களைக் காத்துக் கொள்ளும் வேட்கையில், தங்களைத் தாக்க வரும் எந்த ஒன்றையும் அஞ்சாது தாக்கவோ, தாக்கி அழிக்கவோ முனையாது இருப்பது இல்லை. தீ, மேல்நோக்கி எழும்புவது போல, நீர், கீழ்நோக்கி ஓடுவதுபோல இஃது உயிரின் இயற்கை.

தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது நோக்கமே அன்றி, மற்றவற்றைக் கொல்ல வேண்டும் என்பது கருத்து