உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

123

யானும் ஒருநாள் கொல்லப்படுவேன்' என்று. ஒன்றைக் .ஒ கொல்லுதற்குப்போகும் ஒருவன் தன் நெஞ்சத்து ஒரு நொடிப் பொழுது எண்ணவேண்டும். இவ்வாறு எண்ணும் நெஞ்சம் அமைந்துவிட்டால் பெரும்பாலான கொலைகள் ஒழியும்."

விவேகானந்தர் விளம்பினார்; "இறைவன் மக்களுக்காக மற்றை உயிர்களைப் படைத்தார்; ஆகலின் அவற்றைக் கொன்று தின்பது குற்றமில்லை” என்று பலர் உரைக்கின்றனர். சமயங்களும் கூறுகின்றன. இஃது இயற்கை அல்லா நெறியாம். புலிகளுக்கு எழுத்தறிவும், பேச்சுத் திறமும் இருந்தால் புலிகளுக்காகவே மனிதரைக் கடவுள் படைத்தார்; அவர்களைக் கொன்றுதின்பது குற்றமில்லை என்றே எழுதி வைத்திருக்கும். "இவ்வாறு கொலை பற்றியும், கொன்றுதின்பது பற்றியும் ஆன்றோர்கள் கடிந்து உரைப்பது ஏன்? தீயவற்றில் நிலைத்த நெஞ்சம் நல்லவற்றை நினையாது என்பதனாலேயாம். இக் கோட்பாட்டில் அழுத்தமாக நின்ற பெருந்தகை வள்ளுவர்! தொல் பழமைக் காலந்தொட்டு, க்காலம் வரை வாழ்ந்துள்ள பெருமக்களுள் வள்ளுவருக்கு ணையாகப் புலாலுண்ணலையும், கொலைபுரிதலையும் கடிந்து கூறியவர் இவர்! அவர் நெஞ்சினின்று முகிழ்ந்த அனைத்துக் கருத்துக்களிலும் அருளும் அறமும் பின்னிப் பிணையாமலோ, மின்னி மிளிராமலோ இல்லை! இவ் விரண்டையும் புலமைத் துலைக்கோலின் இணைத் தட்டுகளாகக் கொண்டே வாழ்வியலாம் வாணிகம் புரிகின்றார் வள்ளுவர். அப்பெருந்தகையின் வாணிகப் பெருஞ்சந்தையில் கிடைக்கும் நற்பொருள்களைத் தேடிப் பெற்றுக்கொண்டால் ஒழிய வாழ்வுக்குப்பேறு இல்லை! பேறு பயக்கும் உயர்பண்டம் ஒன்று வருமாறு!

“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை யுண்டார் மனம்.

99