உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம்

அமைந்து கிடக்குமா?

9

கொலைக்கருவி கொண்டிருப்பவன் கொடியவன்; அவனுக்கு இணையான கொடியவன் இல்லையா? உண்டு! அவன் கொலைக் கருவியைப் பயன்படுத்துதற்குப் பயிற்சிக் களமாக இருந்த ஒன்று உண்டு! அதுவே ‘ஊன்கடை’!

ஊனைத் தருவோனும் சரி, அதனைப் பெறுவோனும் சரி! இரக்கம் இல்லாதவர்களே! ஏன் கொல்லுபவர் ஒருவர்; காலைக்குத் துணை நிற்பவர் ஒருவர்! ஏன் கொல்லுகிறார் உயிர்களை? வாங்குவோர் இருக்கும் காரணத்தால், அவர்கள் தலையில் கட்டி ஊதியம் தேட வாய்ப்பு இருக்கும் காரணத்தால் 'கொலை' நடக்கிறது! இக் கொலையைக் கொடுமையானது என்று எவரேனும் - முற்கூறிய இருவருள் எவரேனும் - கருது கின்றனரா? வள்ளுவர் கருதுகிறார்; அவர்வழி யுணர்ந்தோர் கருதுகின்றனர்; வள்ளுவர் போலும் அருளாளரும், அவர் வழியுணர்ந்தோர் போலும் தொண்டரும் எந்நாட்டில் இருந்தாலும், எந்நாளில் இருந்தாலும் கருதுகின்றனர். மற்றவர்கள்?

சுவையான ஊன் உண்ண நினைபவர் பிறிதோர் உயிரின் துடிப்பை, துயரை, இறப்பை எண்ணுவது இல்லை. ஏன்? தன்னலம் நாடும் நெஞ்சம் அவர்க்கு உடமையாகின்றது; பிறர் நலம் நாடும் நெஞ்சம் ஒழிகின்றது. தன் உடல் பருக்கவிரும்புகின்றான்; அவ்விருப்பு பிறவுடலைத் தின்ன ஏவுகின்றது. இப்படிப் பட்ட கொலைக் கொடுமை படிந்துவிட்ட உள்ளத்திலே அன்பு நிலைக்க முடியாது; அருள் அரும்ப முடியாது. அறம் தளிர்க்க முடியாது. அன்பும் அருளும் அறமும் முகிழ்த்து எழாத நெஞ்சில் நல்ல எண்ணம் எழும்புதல் கூடுமோ?

ல்லை.

புள்ளிமான் துள்ளி ஓடித் தப்புதற்குத்தான் நினைகின்றது. ஓடி ஓடி ஒளிகின்றது; அஞ்சி அஞ்சி நடக்கின்றது; என்றாலும் புலி அதற்காகப் பரிவு காட்டுகின்றதா? கொல்லுவதைப் பற்றிச் சிறிய அளவில் கூட நடுக்கம் ஏற்படுவது அதற்கு அதுபோலவே தன் உணவுக்குப் பிறிதொன்றன் உடலைத் தின்னத் தொடங்கியவன் உள்ளத்திற்கும் அதன் துடிப்புப் பற்றிக் கவலையற்றுப் போகின்றது.

66

ஒரு பெரியவர் சொல்கின்றார்; அவர் பாரசீகநாட்டைச் சேர்ந்தவர்; கலீல்சிப்ரான் என்பது அவர்தம் பெயர்; “ “என்னைக் கொல்லுவதற்கு ஏவும் உணர்வு எதுவோ அவ்வுணர்வால்