திருக்குறள் கட்டுரைகள்
உணர்வை மாற்றி விலங்கு உணர்வை எழுப்புகின்றன.
121
எழில்மிகு மலையை மூடுபனி மறைத்து விடுவது இல்லையா? மூடி மறைந்த போழ்தில் அதன் எழில் நம் கண்ணுக்குத் தோன்றாது இருக்கலாம்; அதனைக் கொண்டு மலைக்கு எழில்
ல்லை என்று கூறிவிட முடியுமா? மூடுபனி மறையட்டும்; மலையின் எழில்; பள்ளத்தாக்கின் கவின்; நெளிந்து ஓடும் தண்ணிய ஆற்றின் வனப்பு, மரஞ்செடி கொடிகளின் மாண்பு அனைத்தும் புலனாகும்! மூடுபனி அகலவேண்டும் அவ்வளவு தான்!
மலையை மறைக்கும் மூடுபனிபோல் மனிதனை மறைக்கும் மூடுபனிகள் பலப்பல! அவற்றுள் ஒன்று கொடுமையின் வடிவாய் நின்று, தன்னைக் கொண்டிருப்பவனையும் கொடியவன் ஆக்கி வைக்கும் கொலைக்கருவி! அமைதியாளனையும் அருளாளனையும் வெறியாளனாகத் தூண்டிவிடும் 'கொலைமது'! இரும்பு இருந்தவன் கைசும்மா இராது' என்பது பழமொழி!கொல்லிரும்புவைத்திருப்பவன் கை சும்மா இருக்குமா? உணர்ச்சி ஓய்ந்து கிடக்குமா? உள்ளம்