இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
131
பொழுதில் திருட்டும் வஞ்சமும் தலைகாட்டுவதாக அறிகின்றோமே! இதனை ஒழிக்க வழியே ஏற்படாதா? என்னும் எண்ணம் ஏற்படாது இருப்பது இல்லை.
பிறர் துயரைத் தம் துயராக, பிறர் இழப்பைத் தம் இழப்பாக, பிறர் வாழ்வு தாழ்வுகளைத் தம் வாழ்வு தாழ்வுகளாகக் கருதும் ஒரு நிலைமை மாந்தருக்கு ஏற்படவேண்டும். ஏற்படுமாறு அறிவுடையவர்கள் பாடுபடவேண்டும். பேச்சாலும், எழுத்தாலும் அறிவாளிகள் பாடுபட்டால் போதுமா? அவை போதும் என்றால் இந்த அறிவாளிகள் தேவையே இல்லை நாட்டுக்கு! இப்பொழுது அறநூல்கள் ஒன்றிரண்டா உள? அறங்கூறும் பாக்கள் ஓராயிரம் ஈராயிரமா உள? அறமுரைத்த ஆன்றோர்கள் தாம் எத்துணையர்? அருள் உரைத்த பெரியவர்கள்தாம்