132
இளங்குமரனார் தமிழ்வளம் 9
எத்துணையர்? அவர்கள் செய்யாத செயலையோ அறிவாளர்கள் செய்துவிடப் போகின்றனர்?
னிவரும்
அறவோர்கள் நடந்து காட்டிய நன்னெறிகளைக் கண்ட தொண்டர்களும், மக்களும் "நன்றாக இருக்கிறது; உயர்வாக இருக்கிறது" என்று வாயால் புகழ்ந்தார்களே ஒழிய, நெஞ்சார நினைக்கவில்லை. நேரிதென வாழ்வில் கொள்ளவில்லை. 'வாழ்க' 'ஓங்குக' என்று உரக்கக் கூச்சலிட்டார்களே ஒழியப் பின்பற்றிச் செல்லவில்லை. உயர்ந்தவர்கள் வாழ்வை நிலைக் களமாகக் கொண்டு, பின்பற்றி நடந்து காட்டும் ஒரு குழுமத்தை— தொண்டர் படையை-உருவாக்கவில்லை! பின் நாளிலும் பெரியவர்கள் உரைத்த உரைகள் சரியா? தவறா? பொருந்துமா? பொருந்தாதா? என்பவற்றை ஆராயும் சொல்லாராய்ச்சி அளவிலேயே - அதிலும் முரண்பட்ட அளவிலேயே தத்தம் குறுகிய பான்மையைக் காட்டிப் பிரிந்து பிரிந்து, பிளவாகிப் பிளவாகி, ஒதுங்கி ஒதுங்கி, பகைத்துப் பகைத்து, கெடுத்துக் கெடுத்து, நாட்டை அலைக் கழித்தது அல்லாமல் கண்டதோர் பயனில்லை.
T
நல்லவர் ஒருவர் பெயரால் நான்குபேர்கள் கூடிப் பணி புரிய அறியாதவர்கள், நூறுநூறு பேர்களாக ஆயிரம் ஆயிரம் பேர்களாகத் தெருக்கள் தோறும் கூடிக்கூடி வெறியாட்டம் ஆடுவதைக் காண்கிறோம். போலிமானம், போலிப் புகழ், போலிப் பாராட்டு, போலித் தலைமை இவற்றையே பொருளைக் கொண்டு பொழுதெல்லாம் தொலைத்துப் புன் பிணமாய்ப் போயொழிபவரே மிகுந்துளர். இத்தகையர் உள்ளம் நன்னிலையுற வேண்டுமாயின் இனி, அறிவாளர், அறவோர், அருளாளர் சொல்லைக் காட்டி மேடையில் முழக்கிப் பயனில்லை! இது வரை கொள்ளை கொள்ளையாகச் சொல்லியாகிவிட்டது. இனியும் அவ்வழியே சென்றால் பயன் ஏற்படப் போவது இல்லை!
ஓரிருவர், ஒரு நூற்றுவர் இரு நூற்றுவர் திருந்தலாம்! ஆனால் உலகம் திருந்துதற்கு இயலாது. ஆகையால் இதற்கோர் வழிகாட்டியாக வேண்டும். ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, அறவோர்கள், அருளாளர்கள் பெயரால் அறநெறி காட்டும் அருட் கழகங்கள் தலையெடுத்தல் வேண்டும். அவை, அமைதியான முறையில் ஊரூர் தோறும், தெருத் தெருத் தோறும் கிளைகளுடன் வளரவேண்டும். மேடை ஏறாமல், முழக்கமிடாமல், நடைமுறைச் செயலாலே, ஒழுக்கத்தைக் கற்பித்தாக வேண்டும். இத்தகைய