உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

தனிப்பட்டபகைவனைப் பார்க்கிலும், சமுதாயப் பகைவனையே- அறத்தின் பகைவனையே-பகைவனாகக் கருதிக் காறியுமிழ்வர், மனித இனத்தில் வைத்து மரியாதை செலுத்தமாட்டார், போன போன இடங்களிலெல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல், அன்பு அணைப்பு இல்லாமல், நண்பு, சுற்றம் கருதாமல் சமுதாயப் பகைவனை வெறி நாயை வெருட்டியடிப்பது போல அனைவரும் வெருட்டுவர் என்னும் நி லைமை ஏற்பட்டால் அன்றித், திருடுவது அன்றித், திருட நினைப்பதும், குற்றம் செய்வது அன்றிக் குற்றமானதை எண்ணுவதும் குற்றமே என்னும் நிலைமை ஏற்படாது.

இந்நிலைமை வருவது இனி, வள்ளுவர் கையில் இல்லை! திருக்குறள் பொன்வரிகளில் இல்லை! இருப்பது கற்பவர் நெஞ்சிலும், நிற்பவர் நிலையிலுமே!

“உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.’