28. வழி நடையும் வாழ்க்கை நடையும்
உள்ளமே வெள்ளை உள்ளம்;
மிகப்
பிள்ளை பெரியவர்கள் உள்ளமும் அத்கையதே. ஏன்? களங்கம் எதுவும் இல்லை அவர்கள் உள்ளத்தில். மதிக்காவது "மறு உண்டு; ஆனால் சான்றோர்களுக்கு அஃது இல்லை" என்பது ஆன்றோர் மொழி!
பிள்ளை நிலையிலிருந்து வளர்ந்து விட்ட மாந்தர்கள் உள்ளத்தே பலப்பல கறைகளைக் காணுகிறோம். நச்சுயிர்களும், கொடு விலங்குகளும் உறையும் காடுகளாகவும் குகைகளாகவும் அவர்கள் உள்ளங்கள் இருக்கக் காண்கின்றோம். நம்மோடு அவ்வுள்ளங்களுக்கு ஏதேனும் ஒரு வகையால்—பகைத்தோ— உறவாடியோ—தொடர்பு உண்டாகிவிட்டால் வாடுகிறோம். வதங்குகிறோம். தொடர்பு இல்லையானால் கவலையின்றி ஒதுங்குகிறோம்.
உள்ளம் கொடுமைக்கும் களங்கத்திற்கும் உறைவிடமாகப் பிறவியிலேயே அமைந்து உள்ளதா? பின்னாளில் உருவாக்கி வளர்த்துக் கொண்டதா? பிறப்பிலேயே உள்ளம் அத்தன்மைத் தாகவே அமைந்துள்ளது என்றால் நாம் கவலைப்படுவதில் கை கண்ட பயனேதும் இல்லை; மாற்றியமைக்கவும் முடியாது. ஏனேனில் இறைவன் படைப்பை நாம் மாற்றி அமைத்து விட இயலுமா? ஆனால், உள்ளம் குழந்தைப் பருவத்தில் களங்க மற்றதாகவே-மாசு மறு அற்றதாகவே-உள்ளது. இளம் உள்ளத்திற்கும் பளிங்கிற்கும் வேற்றுமை இல்லை! பின்னர்த்தான், உள்ளத்தில், பழக்க வழக்கங்கள், பெற்றோர்கள் நண்பர்கள் செயல்முறை, வழிகாட்டுதல், உடல்நிலை தொழில்நிலை, உணவு ஆயவை அனைத்தும் புதிது புதிதாகச் சிலச்சில முத்திரைகளை வைத்துச் செல்கின்றன. முத்திரைகளிலே நல்ல முத்திரைகளும் உண்டு; தலைகீழ் முத்திரைகளும் உண்டு; என்ன என்று புலப் படாமல் ஏங்க வைக்கும் முத்திரைகளும் உண்டு; ஏதோ ஒரு வகையில் முத்திரைகள் விழுவது உண்மையே!
பளிங்கிலே தூசி படிவது இல்லையா? புகை பிடிப்பது இல்லையா? வடுக்களும், சிறாய்ப்புகளும் ஏற்படுவது இல்லையா?