உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

9

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

அப்பொழுது விதவிதமான, காணப் பொறுக்காத காட்சிகளை யெல்லாம் காண முடியும் அன்றோ! அது பளிங்கின் இயற்கைத் தன்மையா? இல்லை! பின்விளைவு! இப்படித்தானே ஆற்று நீரும் உள்ளது. மழையாக வீழும் போது மாசு உண்டா துளியில்? மண்ணில் வீழ்ந்தபின் எத்தனை எத்தனை அழுக்கு-குப்பை—

கூளம்-வண்ணம் சுவை?

உள்ளமும் பளிங்கும் ஒப்பானவையே. அது போல், உள்ளமும் நீர்த்துளியும் ஒப்பானவையே. பளிங்கில் பட்ட கறையை அகற்ற முடியும்; நீரின் அழுக்கையும் அகற்ற முடியும்; உள்ளக் கறையைப் போக்க முடியுமா?

கறையை எளிதில் போக்கிவிட முடியும் என்பது வள்ளுவப் பெருமகன் போன்றோரின் தெளிவு. உடலில் அழுக்கிருந்தால் எவ்வளவு எளிதில் நீக்கி விடுகிறோம். எதனால்? தூயநீரால்! நீரால் எவ்வாறு உடல் அழுக்கை நீக்கி விடுகிறோமோ அப்படி எளிதாக உள்ளத்து அழுக்கையும் நீக்கி விடமுடியும்! அதற்குத் தண்ணீர் வேண்டாம்; வெந்நீர் வேண்டாம்; மருந்துப் பொடியோ மணப்பொடியோ வேண்டாம். அவை யனைத்தும் உள்ளக் கறையைப் போக்கப் பயன்படக் கூடியனவா, இல்லை! 'வாய்மை’ என்னும் நீரால்தான் உள்ளந் தூய்மை அடைய முடியும்.

"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்”

என்பது வள்ளுவர் வாய்மை உரை.

வாய்மை நீரால் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தலாம் என்று வள்ளுவர் கூறினாரோ இல்லையோ, உடனே ஒருவர் வரிந்து கட்டிக் கொண்டு ஓடோடி வந்தார். அவர் ஒரு சிக்கலான ஆராய்ச்சியில் மாட்டிக் கொண்டு இருந்தார். 'வாய்மை என்பது யாது, என்பதை அவரால் தெளிவு செய்து கொள்ள முடியாமல் தவித்துக் கிடந்தார். வந்த விரைவிலே நெடு மூச்சு வாங்கப் பேசினார்:

உள்ளதை

"ஐயா, நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு அதாவது உள்ளவாறு கூறுவதுதானே வாய்மை! உள்ளதை உள்ளவாறே எவ்விடத்தும் எப்பொழுதும் கூறி விட வேண்டுமா? உள்ளதைச் சொன்னால், ஊரே அழியும், உறவே கெடும், உயிரே போகும் என்னும் நிலைமை ஏற்பட்டாலும் விளைவைப் பற்றிக் கவலைப் படாமல், சொல்லி விடுவதுதான் வாய்மையா?